ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது-? WATCHMAN, WHAT OF THE NIGHT-? 58-11-30 பிரன்ஹாம் கூடாரம், ஜெபர்ஸன்வில், இன்டியானா, அமெரிக்கா 1. சகோதரன் ஜீன் கோட் ஏசாயா 21:1-12 வரை வாசிக்கிறார் - ஆசிரியர். கடல் வனாந்தரத்தின் பாரம். சுழல்காற்று தென்திசையிலிருந்து எழும்பிக் கடந்து வருகிறது போல, பயங்கரமான தேசமாகிய வனாந்தரத்திலிருந்து அது வருகிறது. கொடிய தரிசனம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது; துரோகி துரோகம் பண்ணி, பாழாக்கிறவன் பாழாக்கிக் கொண்டே இருக்கிறான்; ஏலாமே எழும்பு; மேதியாவே முற்றிக்கைபோடு; அதினாலே உண்டான தவிப்பையெல்லாம் ஒழியப்பண்ணினேன். ஆகையால், என் இடுப்பு மகா வேதனையால் நிறைந்திருக்கிறது; பிள்ளை பெறுகிறவளின் வேதனைகளுக்கு ஒத்த வேதனைகள் என்னைப் பிடித்தது; கேட்டதினால் உளைவுகொண்டு, கண்டதினால் கலங்கினேன். என் இருதயம் திகைத்தது; திகில் என்னைத் திடுக்கிடப்பண்ணிற்று; எனக்கு இன்பந்தந்த இரவு பயங்கரமாயிற்று. பந்தியை ஆயத்தப்படுத்துங்கள், ஜாமக்காரரை வையுங்கள், புசியுங்கள், குடியுங்கள்; பிரபுக்களே, எழுந்து பரிசைகளுக்கு எண்ணெய் பூசுங்கள். ஆண்டவர் என்னை நோக்கி: நீ போய், காண்பதைத் தெரிவிக்கும்படி ஜாமக்காரனை வை என்றார். அவன் ஒரு இரதத்தையும், ஜோடு ஜோடான குதிரை வீரரையும், ஜோடு ஜோடாகக் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின் மேலும் ஏறிவருகிறவர்களையும் கண்டு, மிகுந்த கவனமாய்க் கவனித்துக் கொண்டே இருந்து: ஆண்டவரே, நான் பகல்மு ழுதும் என் காவலிலே நின்று, இராமுழுதும் நான் என் காவலிடத்திலே தரித்திருக்கிறேன் என்று சிங்கத்தைப் போல் சத்தமிட்டுக் கூப்பிடுகிறான். இதோ, ஒரு ஜோடு குதிரை பூண்ட இரதத்தின்மேல் ஏறியிருக்கிற ஒரு மனுஷன் வருகிறான்; பாபிலோன் விழுந்தது, விழுந்தது; அதின் விக்கிரக தேவர்களையெல்லாம் தரையோடே மோதி உடைத்தார் என்று பிரதியுத்தரம் சொல்லுகிறான். என் போரடிப்பின் தானியமே, என் களத்தின் கோதுமையே, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தரால் நான் கேள்விப்பட்டதை உங்களுக்கு அறிவித்தேன். தூமாவின் பாரம். சேயீரிலிருந்து என்னை நோக்கி: ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது-? என்று கூப்பிட்டுக் கேட்க; அதற்கு ஜாமக்காரன்: விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் வருகிறது; நீங்கள் கேட்க மனதானால் திரும்பி வந்து கேளுங்கள் என்று சொல்லுகிறான். 2. சகோதரன் நெவில், உங்களுக்கு நன்றி. உங்களை மீண்டும் காண்பது நன்றாக உள்ளது. இந்தக் காலை வேளையில் நாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் உங்களுக்கு வரவேற்பு அளிக்க வாஞ்சிக்கையில், நம்முடைய வேதபாட வகுப்புக்கு காலை வணக்கங்கள். 3. நான் சிறிது நேரத்துக்கு முன்பு என்னுடைய குடும்பத்தினரோடு சலையில் காரோட்டி வந்து கொண்டிருந்த போது, தேசம் முழுவதும் பனியினால் நிறைந்திருக்கிற ஆபத்தான வழுக்குகிற சாலைகள் உள்ள இதைப்போன்ற நாட்களில் சபைக்கு வருகிற ஜனங்களைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் வெறுமனே காணப்படவேண்டுமென்று வருவதில்லை. அவர்கள் வருவதற்கு ஏதோவொரு நோக்கத்தை உடையவர்களாய் இருக்கிறார்கள், இங்கே இந்தக் காலை வேளையில் இக்கூட்டத்தினரைக் காண்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிற நம்முடைய தகப்பன்மார்களின் விசுவாசமானது முன் போலவே எப்போதும் இருக்கிறது, அந்த விசுவாசமானது எவ்விடங்களிலுமுள்ள மனிதர்கள் மற்றும் ஸ்திரீகளின் இருதயங்களில் கொழுந்து விட்டு எரிகிறது. 4. நம்முடைய சகோதரன் ஜீன்-கோட் மூலமாக சிறிது முன்பு வாசிக்கப்பட்ட வார்த்தையாகிய ஏசாயா புத்தகத்தின் 21-ம் அதிகாரத்திலிருந்து சிறிது நேரம் நாம் ஆய்ந்து படித்து விட்டு, பின்பு வியாதியஸ்தருக்காக ஜெபிக்கலாம். 5. இப்பொழுது இக்காலை வேளையில், நான் ஒரு பாடத்திற்காக 11-ம் வசனம் முதல் 12 வசனம் முடிய உள்ள பாகத்திலிருந்து பேச விரும்புகிறேன். அது ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது-? என்பதாகும். நாம் பேச முயற்சிப்பதற்கு முன்பு, சிறிது நேரம் ஜெபத்தில் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். 6. தேவனாகிய கர்த்தாவே, எங்களுடைய பிதாக்களின் தேவனே. பூமியில் முதலாவது சுவாசித்த ஜீவசுவாசத்தை ஊதின தேவன் நீரே, நீர் இந்த நேரம் மட்டுமாக ஒவ்வொரு ஜீவனையும் கட்டுப்படுத்துகிறவராயிருக்கிறீர், மேலும் நீர் ஒவ்வொரு ஜீவனையும் என்றென்றுமாக கட்டுப்படுத்துகிறவராயிருப்பீர். மனித இனம் யாவற்றையும், சுவாசமுள்ள யாவற்றையும் சிருஷ்டித்தவர் நீரே. சிருஷ்டிகர் நீரே. 7. மேலும் இக்காலை வேளையில், உம்முடைய வாக்குத்தத்தங்கள் ஒவ்வொன்றும் உண்மையாய் உள்ளன என்று எங்களுடைய இருதயங்களில் விசுவாசிப்பதற்காக நாங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறோம். மேலும் அது... உம்முடைய நாமத்தில் இரண்டு மூன்று பேர் (உம்முடைய பிள்ளைகள்) எங்கே கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவில் நீர் இருப்பீர் என்றும் நீர் அவர்களுடைய அழைப்புக்கு பதிலளிப்பீர் என்றும் இந்த வாக்குத் தத்தங்களில் நீர் கூறியிருக்கிறீர். 8. மேலும் அங்கே இன்று பாரமுள்ள இருதயங்கள் இருக்கின்றன. நான் சபையில் நுழைந்தது முதற்கொண்டு, தூக்குப்படுக்கைகள் மற்றும் கட்டில்களில் இருப்பவர்களையும் தங்களுடைய கரங்களில் பாதித்திருக்கிற தொற்று நோய்களினால் சட்டைக் கைப்பகுதியை உயர்த்தி வைத்திருக்கிற சிலரையும், இழக்கப்பட்டிருக்கிற அன்பார்ந்தவர்களைக் கொண்டு இருக்கிறதாக நான் கேள்விப்பட்டிருக்கிற மற்றவர்களையும் நான் கண்டேன்... ஓ, இது பாவமும் துன்மார்க்கமுமான ஒரு உலகமாகும், ஆனாலும் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது என்று எங்களிடம் கூறியிருக்கிற கர்த்தராகிய இயேசுவில் இந்த எல்லா காரியங்களும் அடக்கியாளப்பட வேண்டியதாயிருக்கிறது. 9. இந்தக் காரியங்களில் அனேகமானவை எங்களுடைய முழங்கால்களுக்கு எங்களைக் கொண்டு வருகின்றன என்பதை விசுவாசிக்கும் போது நாங்கள் இக்காலையில் ஆறுதல் அடைகிறோம். கர்த்தருக்குக் காத்திருப்பவர்களோ புதுப்பெலன் அடைவார்கள் என்ற வேத வாக்கியத்தைக் குறித்து சிந்தித்துப் பார்க்கவே நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் கழுகைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள். கவிஞன் கூறினது போல, "எவ்வாறு காத்திருப்பது என்று எனக்குக் கற்பியும் கர்த்தாவே, எனக்குக் கற்பியும் கர்த்தாவே.’ 10. பரிசுத்த ஆவியானவர் மூலமாக மகிமையிலுள்ள எங்கள் இரட்சகரின் வாயிலிருந்து வரும் (வார்த்தைகளைக்) கேட்பதற்காக நாங்கள் இன்று காத்துக் கொண்டிருக்கையில், அவருடைய வார்த்தையின் மூலமாக அன்பார்ந்த காரியங்களை எங்களிடம் பேசும் அவருடைய சத்தத்தை கேட்கும்படியாக நாங்கள் பொறுமையுடன் காத்துக் கொண்டிருப்போமாக. எங்களுடைய பாவங்களுக்காக மன்னிப்பையும் எங்களுடைய வியாதிகளுக்காக சுகமளித்தலையும் பேசுவீராக. இக்காலையில் இந்தக் கூடாரத்தை விட்டு நாங்கள் போகும் போது, எம்மாவூரிலிருந்து வந்தவர்களைப் போல, "வழி நெடுக அவர் நம்முடன் பேசினபோது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா-?’ என்று கூறி, களிகூர்ந்து கொண்டே போவாமாக. அவர்கள் அந்நாளில் அவரைக் கண்டு கொண்டது போல, அவர், உயிர்த்தெழுந்த கர்த்தர் என்பதை நாங்கள் உண்மையாகவே விசுவாசிக்கிறோம். 11. அவர் ஜனங்களின் மத்தியில் இருக்கிறார். நாங்கள் கவலைப்படவோ அல்லது எங்களுடைய இருதயங்கள் மயக்கமடையவோ செய்யாது. நாங்கள் ஒவ்வொரு மணி நேரமும் உம்மிலே எங்கள் விசுவாசத்தை அப்படியே புதுப்பிக்கட்டும். இதை அருளும், பிதாவே. நீர் எழுதப்பட்ட வார்த்தையை ஆசீர்வதிக்க வேண்டுமென்றும், கேட்கிற காதுகளையும், பேசுகிற உதடுகளையும் நீர் ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறோம், மகிமையை நீரே பெற்றுக் கொள்ளும், இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென். 12. பிரச்சனைகளிலிருந்து பாதிக்கப்படாதவர்கள் நம்மில் யாரும் கிடையாது. எல்லா வியாதிகளிலிருந்தும் நம்மை விலக்கி வைப்பதாக தேவன் வாக்குப் பண்ணவில்லை, ஆனால் அவருடைய பெலன் போதுமானதாக இருப்பதாக எழுதப்பட்டுள்ளது. அவர் ஒரு போதும் நம் மேல் அதிகமாக சுமத்த மாட்டார், ஆனால் அதை தாங்கும்படியான கிருபையை நமக்கு அருளுவார். ஆகையால் அதை அறியும் போது, அந்த ஆறுதலை நாம் கொண்டிருக்கிறோம். 13. சற்று முன்பு சிறிது நேரமாக (வாசித்த) அந்த வேதபாகத்தைப் பற்றிய சிந்தனைக்காக கடந்த சில மணி நேரங்களாக என்னுடைய இருதயத்தில் ஏதோவொன்று வைக்கப்பட்டது போல காணப்பட்டது: அது என்னவெனில் "ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது-?’ 14. அது ஒருக்கால் ஏறக்குறைய சூரியன் மறையும் நேரத்திற்கும் இருளான நேரத்திற்கும் இடைப்பட்ட ஒரு நேரமாக இருந்தது. அது பட்டணத்தில் மிக மோசமான ஒரு நாளாக இருந்தது, ஏனென்றால் அங்கே ஒரு அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டிருந்தது, அவர்கள்... அந்த கோபுரத்திலிருந்த ஜாமக்காரன் குறிப்பிட்ட தூரத்தில் இரதங்களின் சக்கரங்களிலிருந்து தூசி எழும்பினதை தான் கண்டதாக செய்தி அனுப்பினான். குறிப்பிட்ட தூரத்தில் வழியில் குதிரைகளின் குளம்பொலியின் சத்தத்தைக் அவன் கேட்டான். 15. ஆனால் இரண்டு வாலிப ஸ்திரீகள் தங்களின் இளம் வாலிப வயதில் கிணற்றண்டையில் நின்று கொண்டிருந்தனர், இந்த ஜாமக்காரனின் வார்த்தைகளைக் காட்டிலும் அவர்களுக்கு சிந்திப்பதற்கு அதிகமான காரியங்கள் இருந்தன. அவர்கள் எண்ணிப் பார்த்தனர். அது அவர்களுக்கு அதிக முக்கியமானதாக இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் அவர்கள் அப்படியே வாலிபப்பெண்மையின் நாணத்தால் முகஞ்சிவந்தவர்களாய் இருந்தார்கள். அதுவாக இருக்கலாம், ஏனெனில் அந்த இரவில் அங்கே ஒரு விருந்து நடக்கப்போவதாக இருந்தது, இந்த வாலிபப் பெண்கள் இந்த விருந்தில் கலந்து கொள்ளும்படி விரும்பினர். 16. அந்த ஜாமக்காரனின் எச்சரிக்கையானது அவர்கள் கொண்டிருந்தவைகளின் மேல் பாதிப்பை ஏற்படுத்தாததாக காணப்பட்டது, அவர்களுடைய உலகப்பிரகாரமான இன்பத்தை அந்த இரவுக்காக விலை கொடுத்தனர் (figured). அதன் பின் உரையாடல் தொடர்கிறது, ஒரு வாலிபப் பெண் மற்றொருவளிடம், "நம்முடைய நாளில் அப்படிப்பட்ட மகிழ்ச்சியைக் கெடுப்பவர்கள் நம்மிடம் உள்ளனர், நாம் கொண்டிருக்கிற இந்த சிலாக்கியங்களிலிருந்தும், நாம் அனுபவிக்கக்கூடிய இந்த இன்பங்களிலிருந்தும் நம்மை விலக்க முயற்சிக்கும் யாரோ ஒருவரை நாம் கொண்டிருப்பது மிக மோசமான காரியம் இல்லையா-?’ என்றாள். 17. அது அப்படியே ஏறக்குறைய இன்றைய நவீன மாறுபட்ட நிகழ்வோடு ஒத்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். நீங்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் ஆபத்துகளைக் குறித்து அவர்களை விழிப்புடன் இருக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்ய முயற்சி செய்யும் போது, அந்த ஜனங்கள் எண்ண முயற்சிக்கிறார்கள் - நீங்கள் ஏதோவொரு பழைய பழங்கால நடை உடைகளை கொண்டவர் என்றும், வாழ்க்கையிலிருந்து சந்தோஷம் எல்லாவற்றையும் எடுத்துப் போட முயற்சிக்கும் ஏதோ ஓருவர் என்றும் அவர்கள் நினைப்பதாகத் தோன்றுகிறது. 18. நாம் மீண்டும் வாலிபர்களைக் குறித்து எண்ணிப் பார்ப்போம், அவர்கள் தொழிற் கூடத்திலிருந்து வந்து கொண்டிருந்தனர், வேலையின் நிமித்தமாக அவர்களுடைய முகங்கள் அழுக்காகிப்போயிருந்தன, அவர்கள் அந்த பகல் வேளையில் வேலை செய்திருந்தனர். மேலும் ஒரு வாலிபன் மற்றவனிடம், "நாம் எவ்வளவு கூடுமோ அவ்வளவு சீக்கிரமாக கழுவி, சிறிது சுத்தம் செய்துவிட்டு, ஏன், நாம் வழக்கத்தைப்போல மது அருந்தும் இடத்தில் சந்திப்போம். ஜான், இன்று நாம் கேள்விப்பட்ட அந்த செய்தியைக் குறித்து நீ கலக்கடைந்திருக்கவில்லை என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். கோபுரத்தின் மேலிருக்கிற ஜாமக்காரன் வாழ்க்கையின் சந்தோஷம் எல்லாவற்றையும் எடுத்துப் போட முயற்சித்து, அங்கே நெருங்கி வரும் ஒரு ஆபத்து உள்ளதாக நம்மிடம் கூற முயற்சிக்கிறான். ஆனால் அங்கே நமக்கு சிறந்த இராணுவம் உள்ளதென்று உனக்குத் தெரியும், நம்முடைய படை வீரர்களில் அநேகரும் நாம் சந்திப்பது போல இந்த இதே இடத்தில் ஒவ்வொரு இரவும் சந்திக்கிறார்கள், ஒரு சிறு நட்புரீதியான சூதாட்டம் மற்றும் கொஞ்சம் மது அருந்துதல் போன்ற ஒரு ஐக்கியத்தை நாம் ஒன்றாக அனுபவிக்கிறோமே’ என்று கூறியிருக்க வேண்டும். 19. அவன், "இந்த ஜாமக்காரன் கூறுவதைக் குறித்துள்ள இந்த ஏதாவது காரியத்தைப் பற்றி விழிப்பாய் இருப்பதை நான், நானே அப்படியே ஏற்க மறுக்கிறேன். நெருங்கி வரும் ஆபத்துகள் ஏதாவது இருந்தால், அதைக் குறித்து நம்முடைய – நம்முடைய ரபிகளுக்கும் நம்முடைய மேய்ப்பர்களுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும் என்று நாம் நம்புகிறோம். அப்படிப்பட்ட காரியங்களைக் குறித்து அவர்கள் நம்மிடம் சொல்லி இருப்பார்கள். நாம் கோபுரத்தின் மேலிருக்கும் இந்த ஜாமக்காரனுடைய இந்த சோகக்கதையைக் கேட்பதில் நமக்கு அக்கறை இல்லை’ என்று கூறினான். 20. அது இன்றுள்ள நம்முடைய தேசத்தைப் பற்றிய அதே குறிப்பிடத்தக்க காட்சியாக இல்லையா, நம்முடைய தேசத்தின் இளம் பருவத்தினரும் (இளம் பருவத்தினர் மாத்திரமல்ல, நம்முடைய தேசத்தினுடைய வயது சென்றவர்களும்) ஒழுக்கக்கேடானவர்களாகப் போய் விட்டனர், மேலும் அவர்கள் எச்சரிக்கைகளை கேட்க மறுக்கின்றனர். ஒரு உண்மையான ஜாமக்காரன் ஒரு எச்சரிக்கையை கொடுத்த உடனே, மதத்திற்கு எதிரான கொள்கையுடைய ஒருவர் என்றோ அல்லது ஏதோவொரு மதவெறியன் என்றோ வகைப்படுத்தபட்டுவிடுவர். 21. பகல் சென்று இரவு வந்த போது, ஒருவேளை வாயிற்கதவுகளைக் காவல் காத்துக் கொண்டிருந்த ஒரு படைவீரன் வாசலில் இருந்திருக்கலாம். அவன் கொஞ்சம் இளைப்பாறுதலற்றவனாக ஆகிறான். மேலும் அவன் தனக்குப் பக்கத்தில் காவல் காத்துக் கொண்டிருந்த போர்வீரனிடம் சென்று, "அந்த ஜாமக்காரன் சரியாக இருந்தான் என்பதற்கு ஏற்ற வாய்ப்புண்டு என்று நீ நம்புகிறாயா-?’ என்று கேட்டான். 22. அங்கே ஆபத்தைக் குறித்த ஏதோவொன்றுள்ளதை நீங்கள் அறிவீர்கள். மரணத்தைக் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்கிறதாய் தோன்றுகிற மரணத்தைக் குறித்து அங்கே ஏதோவொன்று உள்ளது. அநேக நேரங்களில் அந்த அன்பார்ந்தவர்கள் மறுகரையைக் கடப்பதற்கு சற்று முன்பாக அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை வருகிறதாகக் காணப்படுகிறது. 23. என்னுடைய தகப்பனாரைக் குறித்து நான் நினைத்துப் பார்க்க முடியும், அவர் மரிக்கும் முன்பாக அநேக வருடங்களாக கென்டக்கியை விட்டு வெளியே இருந்து வந்தார். ஆனால் திடீரென்று பழைய வீடு இருந்த இடத்திற்கு போய், அவருடைய அன்பார்ந்தவர்களிடமும் அவருடைய நண்பர்களிடமும் பேச வேண்டுமென்று தகப்பனாரை செயலாற்றச் செய்யும் படியாக ஏதோவொன்று காணப்பட்டது. அவர் வீட்டிற்குத் திரும்பி வந்த பிறகு, அவரைப் பார்க்காத அவருடைய சகோதரன் அவரைக் காணும்படி ஜெபர்ஸன்வில்லுக்கு வர வேண்டுமென்ற விநோதமான எச்சரிப்பைப் பெற்றார். அவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போதே, அப்பா மற்ற உலகத்திற்குள் கடந்து சென்று விட்டார். 24. என்னுடைய மாமனாரைக் குறித்து எண்ணிப்பார்க்கிறேன். அவர் கடந்து போவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு, அவர், "பில்லி, நீயும் நானும் அணில் வேட்டையாடுவதற்காக ஊடிகாவுக்கு மேலே போகலாம். நான் அப்படியே பழைய இடங்களுக்கு போக விரும்புகிறேன்’ என்றார். 25. எப்படியும் நான் தேவனுடைய தெய்வீக வழிநடத்துதலினால், அந்த நாளில் நான் அவரோடு போக முடியவில்லை. அவர் அந்நாளில் மேலே சென்று வேட்டையாடினார்; அவர் பேருந்தில் கீழே திரும்பி வந்த போது, அவர் - அவர் என்னிடம், "நான் மேலே அந்த மலையில் உட்கார்ந்திருந்தேன்; அது இப்பொழுது முழுவதுமாக மாறிவிட்டது. ஆனால் பேட்டில் கிரீக்கில் அந்த காடுகளின் கீழே வழியிலுள்ள குறிப்பிட்ட வளைவில், எங்களுக்கு சற்று மேலாக, என்னுடைய தாயார், ‘ஓ, ஃபிராங்கி’ என்று கூப்பிடுவதை என்னால் கேட்க முடிந்தது போன்று அது காணப்பட்டது’ என்றார். அந்த இரவில் இந்த சபையின் இரண்டாவது வரிசையில் என்னுடைய இடதுபக்கத்தில் அவர் சாட்சி கொடுத்தார், அவருக்காக ஜெபிக்கும்படி ஜனங்களுடைய ஜெபங்களையும் விரும்பினார். ஒரு சில நாட்களுக்குப் பிறகு, நாங்கள் அவரை அடக்கம் பண்ணினோம். 26. தேவன் எப்போதுமே ஒரு செய்தியாளனை அனுப்புகிறார் என்பதாகக் காணப்படுகிறது. அது சமீபித்து வருகிற காரியங்களைக் குறித்த ஒரு எச்சரிக்கையை இருதயத்தில் உண்மையுள்ளவர்களுக்கு கொடுப்பதென்பது அவருடைய நன்மையாகவும், அவருடைய கிருபையாகவும் உள்ளது. ஒவ்வொருவர் மேலும் இருள் மற்றும் அந்தகாரம் இருக்கிற இப்பொழுது நாம் ஜீவித்துக் கொண்டிருக்கும் இந்த நாளில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தேவனுடைய ஜனங்களுடைய இருதயத்தை இறுகப் பற்றிப்பிடிக்கும் ஒரு ஆசீர்வாதமான நம்பிக்கை இருப்பதாகக் காணப்படுகிறது, ஏதோவொரு மகிமையான மணி நேரத்தில் இயேசு முன் தோன்றுவார். 27. பட்டணத்தில் மனக்கலக்கம் பிடித்த இந்த மகத்தான நேரத்தில், வாலிப ஜனங்கள் அதைப் புறக்கணித்து விட்டார்கள். அநேக ஜனங்கள் ஜாமக்காரன் கூறினதைக் குறித்து கவலைப் படாமல் இருந்து விட்டார்கள்... நிச்சயமாகவே அவர்கள் மது அருந்தும் இடத்தில் குடித்துக் கொண்டிருந்தார்கள், விருந்து தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது, படைவீரர்கள் எல்லாரும் குடித்துக் கொண்டிருந்தார்கள், அவர்கள் ஒரு பெரிய நேரத்தைக் கொண்டிருந்தனர். அவர்களால் எவ்வளவு கூடுமோ அவ்வளவாக பாதுகாப்பாக இருந்ததாக அவர்கள் எண்ணிக் கொண்டனர். 28. எதுவுமே அவர்களுக்கு தீங்கு வளைவிக்கப் போவதில்லை, ஏனென்றால் நாம் அதை அழைக்கிறபடி, அவர்கள் ஐயத்துக்கு இடமின்றி அதிகமாகக் குடித்திருந்தனர், விஸ்கி மது வகைகளையும், கலக்கப்பட்ட மதுபானங்களையும் அருந்தியிருந்தனர். திடீரென்று அங்கே சரியாக பட்டணத்திற்குள் ரதங்கள் உருண்டு வந்தன. மதுபான கடையின் கதவுகளும், உள்ளேயும் வீடுகளும் உடைக்கப்பட்டன, ஈவிரக்கமின்றி கொல்வதற்கான ஆயுதங்கள் இயங்கிக் கொண்டிருந்தன (அதாவது ஆயுதங்களால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டனர் – மொழி பெயர்ப்பாளர்). ஜாமக்காரனின் எச்சரிக்கையை கேட்க மறுத்த காரணத்தினால் தான் அவ்வாறு சம்பவித்தது. 29. பழைய வேதாகமத்தில் ஒரு ஜாமக்காரனின் கடமைகள் எவையெனில் – அவன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதனாக இருந்தான். வானத்திலுள்ள கோள்களைக் குறித்து (heavenly bodies) எச்சரிக்கை செய்யும் ஒரு மனிதனாக அவன் இருந்தாக வேண்டும். ஜனங்களிடம் துல்லியமான நேரத்தை சொல்லும்படிக்கு நட்சத்திரங்கள் எங்கே தொங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை அவன் மிகச்சரியாக அறிந்திருக்க வேண்டும். 30. தூங்க முடியாமல், இளைப்பாறுதலற்று, சோர்வடைந்திருக்கிற அநேகர் ஒருக்கால் வெளியே வந்து கோபுரத்தில் இருக்கிற ஜாமக்காரனைப் பார்த்து, கூச்சலிட்டு, "ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது-?’ என்ற வார்த்தைகளை சத்தமிட்டுக் கேட்கலாம். அவன் நட்சத்திரங்களை உற்றுப்பார்த்து, அது இன்ன இன்ன நேரம் என்று கூறுவான். அதன் பிறகு தங்களுடைய படுக்கைக்கு அல்லது அவர்கள் எங்கே தங்கும்படி விரும்பினார்களோ அங்கு திரும்பிச் சென்று, களைப்பான, சோர்வுற்ற, இளைப்பாறுதலற்ற இரவு முடிந்து பகல் வெளிச்சம் வருவதற்காக காத்துக் கொண்டிருப்பர். தேவனே, இரக்கமாயிரும். 31. நாம் நம்முடைய மகத்தான ஜாமக்காரரைப்பார்த்து, "இரவு எவ்வளவு சென்றது-?’ என்று சத்தமிட்டுக் கூப்பிடாமல் இருக்கிற நேரம் இன்று இல்லையோ என்று நான் வியப்படைகிறேன். ஒரு ஆபத்து சமீபித்து வந்து கொண்டிருக்கிறது, முழு உலகமும் அதனுடைய பாதிப்பினால் அசைக்கப்படப்போவது போலக் காணப்படுகிறது. 32. மேலும் ஜாமக்காரன் எல்லா நேரமும் பணியில் இருக்க வேண்டியிருந்தது. நெருங்கி வரும் ஆபத்துக்களைக்குறித்து அவன் ஜனங்களை எச்சரிக்கை செய்ய வேண்டியிருந்தது. அது தான் அவனுடைய வேலையாக இருந்தது: அதாவது ஆபத்து நெருங்கி வருகிறதா என்று விழிப்புடன் இருப்பது தான். 33. மதில் சுவரைக்காட்டிலும் அதிக உயரமாகக் கட்டப்பட்டிருந்த ஒரு கோபுரத்தில் மேலே அவன் இருந்தான். அங்கே இந்த கோபுரத்தின் மேல் அவன் இருந்தான், வானசாஸ்திரத்தைக் குறித்த புத்தகங்களும், மற்றவைகளும் அங்கு இருந்தன, ஆகவே அவனால் நடசத்திரங்களைக் கவனித்து நேரத்தை சொல்ல முடிந்தது. அந்த நாளின் நேரத்தில் ஏதாவது காரியம் நெருங்கி வருமானால், அவனால் அதைச் சொல்ல முடிந்தது. மேலும் அவ்வேளையில் தரையில் இருந்த யாரைக்காட்டிலும் அதிக தூரத்திற்கு அவனால் காண முடிந்தது. மதிற்சுவரின் மேலிருந்த யாரைக்காட்டிலும் அவனால் அதிக தூரம் காண முடிந்தது, ஏனென்றால் அவன் மேலே உயரத்தில் இருந்தான். 34. மேலும் நீங்கள் எவ்வளவு உயரம் போகிறீர்களோ அவ்வளவு கூடுதலாக உங்களால் காண முடியும். பூமியோடு கட்டப்பட்டவர்களைக் காட்டிலும் அதிக தூரத்திற்கு நெருங்கி வரும் ஆபத்துக்களைக் குறித்து உங்களால் கூற முடியும். 35. தேவன் ஏசாயாவை ஒரு ஜாமக்காரனாக உண்டாக்கியிருந்தார் என்று அவன் தன்னுடைய நாளில் உரைத்த விதமாக. தேவன் தமது தீர்க்கதரிசிகளை கழுகுகளுக்கு ஒப்பிட்டார். நான் அடிக்கடி கழுகுகளைக் குறித்த பாடத்தை பிரசங்கித்திருந்த விதமாக: மற்ற எந்த பறவையைக் காட்டிலும் அதிக உயரத்திற்குப் போகக் கூடிய ஒரு பறவை தான் கழுகு. அது போகும் உயரத்திற்காக விசேஷமாக உண்டாக்கப்பட்டிருக்க வேண்டும். 36. இப்பொழுது, பருந்து அதை ஒருபோதும் பின்தொடர முடியாது. எந்த பறவையும் கழுகைப் பின் தொடர முடியாது. அது தேவனால் வடிவமைக்கப்பட்ட பறவையாகும், அது அவ்வாறு உண்டாக்கப்பட்டிருந்தது. வேறொரு பறவையானது அதனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள முயற்சித்தால், அது அழிந்து போய் விடும். அது பலமான இறகுகளைக் கொண்டிருக்க வேண்டும், பலமான இறக்கைகள். அது உயரமாய் போய் அதனால் காண முடியவில்லை என்றால், காணும்படி நல்ல கண்களைக் கொண்டிருக்க முடியவில்லை என்றால், என்ன நன்மை பயக்கும். பருந்து அங்கே மேலே குருடாகிப் போய் விடும். அதனால் காண முடியாது. 37. ஆனால் கழுகு எவ்வளவு உயரத்தில் போகிறதோ அவ்வளவு கூடுதலாக அதனால் காண முடியும். தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளைக் கழுகுக்கு ஒப்பிடுகிறார். அவர்கள் ஜாமக்காரர்களாய் இருக்கிறார்கள், அவர்கள் மேலான நிலைக்குச் செல்கிறார்கள், ஆகவே அவர்களால் இன்னும் கூடுதலாக காண முடியும். மேலும் அவர்களுடைய கண்கள் ஆவிக்குரிய பிரகாரமாக உண்டாக்கப்பட்டிருக்கின்றன, ஆகையால் நெருங்கி வரும் ஆபத்துக்களை அவர்களால் காண முடிகிறது. அங்கே ஆபத்து நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்று ஜனங்களை எச்சரிக்கும்படி தேவன் ஏசாயாவை மேலே வைத்திருந்தார், அவர்களோ அவனுக்கு செவிகொடுக்கவில்லை. 38. மேலும் இன்றைக்கும் தேவனுக்கு கழுகுகள் உண்டு. நம்முடைய செய்தியாளர்கள் கோபுரத்தின் மேலிருக்கிற மனிதர்களாய் இருக்கிறார்கள், அவர்கள் ஆவியில் மேலேறிச் சென்று, எல்லா இயந்திரநுட்பங்களுக்கும் எட்டாத தூரத்தில், எல்லா அணு குண்டுகளுக்கும் எட்டாத தூரத்தில், மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கும் எட்டாத தூரத்தில் போய் விடுகிறார்கள். அந்த நோக்கத்துக்காகவே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட மனிதர்களை அவர் கொண்டிருக்கிறார்; அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கல்வாரியின் மதற்சுவரின் மேலேறி சென்று, சிலுவையின் உச்சியில் நின்று கொண்டு, "கர்த்தர் உரைக்கிறதாவது’ என்ற செய்தியை திருப்பி அனுப்ப முடிகிறது. 39. அவர்களுடைய ஆவிக்குரிய பார்வையானது ஆலயத்தில் இருக்கிற ஆசாரியர்களின் பார்வையைக் காட்டிலும் அதிக தூரத்தில் இருக்கிறது. ஜீவியப் பிரயாணத்திலுள்ள சாதாரண மனிதனின் பார்வையைக் காட்டிலும் எட்டாத தூரத்தில் உள்ளது. தேவன் அவர்களை அழைத்திருக்கும் பணிக்காக அவர்கள் விசேஷமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே நெருங்கி வரும் அந்த காரியங்களைக் குறித்து நாம் கேள்விப்படும் போது, அதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அது நமக்கு அளிக்கப்படுகிறது. 40. அதன்பிறகு இப்பொழுது சிறிது நேரம் நான் அதை மாற்றிவிட்டு, இந்த கழுகுகள், அல்லது தீர்க்கதரிசிகள் அல்லது கோபுரத்தின் காவல் காப்பவர்களின் இராஜாவின் பக்கமாக உங்கள் கவனத்தைத் திருப்புகிறேன்: அந்த இராஜா தாமே கர்த்தராகிய இயேசுவாயிருக்கிறார். அவர் இங்கே சரியாக சிலுவையின் நிழல்களில் (இருந்த மட்டும்) இருந்த அந்த நாட்களைக் காட்டிலும் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கும் இந்நாள் மிகவும் முக்கியமான நாளாக இருக்கிறது; அவர் இங்கிருந்து போனதைக் குறித்து உரைத்த காரியங்களைக் காட்டிலும் அதிகமாக அவருடைய இரண்டாம் வருகையைக் குறித்து உரைத்தார். 41. நீங்கள் கவனமாக வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தால், அவர் போவதற்கு சற்று முன்பாக இந்நாளில் சம்பவிக்கும் காரியங்களைக் குறித்து அவர் தீர்க்கதரிசனம் உரைத்ததை நீங்கள் கண்டறியலாம். அவர் சிலுவையில் அறையப்பட்டாக வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் (நம்முடைய) குற்றங்களுக்காக குற்றமற்றவராக – பாடுபட வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் மீண்டும் கல்லறையிலிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார் என்பதை அவர் அறிந்திருந்தார். அவரை கல்லறையில் பிடித்து வைப்பதற்கு எந்த வல்லமையும் கிடையாது என்பதை அவர் அறிந்திருந்தார். ஏனென்றால், தேவனுடைய வார்த்தையானது, "என்னுடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டேன்; அவருடைய ஆத்துமாவை பாதாளத்தின் விடேன்’ என்றும் கூறியிருந்தது. அந்த தீர்க்கதரிசனத்தை உடைத்துப் போடக்கூடிய எந்த வல்லமையும் அங்கே கிடையாது. அவருடைய வார்த்தை சத்தியமாய் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் தங்களுடைய குறித்த காலங்களில் (அவைகளை) நிறைவேற்றுவார்கள். 42. பிதாவானவர் என்ன கூறியிருந்தார் என்றும், பிதாவானவரால் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்ள முடியும் என்றும் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆகையால் அவருடைய மகத்தான இருதயம் அவருக்குள் இருந்தது, அது தேவனுடைய சிங்காசனமாக இருந்தது... சகல தேசங்களை நிரூபித்துக் காட்டுவதற்கும், சகல ஜனங்களை நிரூபித்துக் காட்டுவதற்கும் இந்த மகத்தான சோதனை காலங்கள் வரும் என்று அவர் தம்முடைய இருதயத்தில் அறிந்திருந்தார். 43. ஆகையால், அவர் மீண்டும் உயிர்தெழுவாரா மாட்டாரா என்றோ அல்லது அவர் வேத வாக்கியங்களின்படி சிலுவையில் அறையப்படுவாரா அறையப்படமாட்டாரா என்றோ அல்லது அவர் பரத்திற்கு ஏறிச் செல்வாரா செல்லமாட்டாரா என்றோ பரிசுத்த ஆவியானவர் வருவாரா மாட்டாரா என்ற பெரிய கேள்விகள் வைக்கப்பட்டிருந்ததை அவர் அறிந்திருந்தார். ஆனால் கேள்வி என்னவெனில்: அவர் வரும் போது, பூமியில் ஏதாவது விசுவாசம் விடப்பட்டிருக்குமா-? என்பதாகும். மேலும் விசுவாசம் எங்கிருந்து வரும்-? தேவனுடைய வார்த்தையைக் கேட்பதன் மூலமாக விசுவாசம் வரும். அதுவே அவருடைய கேள்வியாக இருந்தது. ‘நான் வரும் போது, பூமியில் விசுவாசம் இருக்குமா-?’ 44. அவருடைய வார்த்தையை விசுவாசிக்கிற ஜனங்களை அவர் காண்பாரா-? இப்பொழுது, நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற இந்நாளில் அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தையின் பக்கங்களைத் திருப்பிப் பார்த்து, இன்று பூமியின் மேல் சம்பவிக்கும் என்று அவர் சொல்லிய அதே காரியங்கள் சமீபித்து வருவதை நம்மால் காண முடியும்... அடையாளங்களும் அற்புதங்களும் சம்பவித்துக் கொண்டிருக்கின்றன. 45. மனிதருடைய இருதயங்கள் பயத்தினால் சோர்ந்து போகிறது. அங்கே தத்தளிப்பான ஒரு நேரம் உள்ளது, மேலும் தேசங்களுக்கு இடையே இடுக்கண் உள்ளது. பறக்கும் தட்டுகள் போன்ற அச்சமூட்டும் காட்சிகள் வானங்களில் காணப்படுகிறது, மேலும் பென்டகன் முழுவதுமாக கலக்கமுற்றுள்ளது. சமுத்திரம் முழக்கமாயிருக்கிறது, பல இடங்களில் பூமியதிர்ச்சிகள் உண்டாகின்றன. மனிதருடைய இருதயங்கள் பயத்தினால் சோர்ந்து போகின்றன. மகத்தான அணு ஆயுதங்கள் காத்துக் கொண்டு இருக்கின்றன. உலகமானது இதற்கு முன்பு ஒரு போதும் நேரில் கண்டிராத இருள் பூமியின் மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது... 46. கடந்த வாரத்தில், ‘தீர்க்கதரிசி ஆப்பிரிக்காவுக்கு விஜயம் செய்கிறார்’ என்ற புத்தகத்தை எழுதிய என்னுடைய விலையேறப்பெற்ற நண்பர்கள் மற்றும் சகோதரர்களில் ஒருவரான கேப்டன் ஜூலியஸ் ஸ்டாட்ஸ்க்லெவ் (Captain Julius Stadsklev) அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் படியான சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது. மேலும் சகோதரன் ஜூலியஸ் அவர்கள் கலிபோர்னியாவில் இருந்தார், அவர் இப்பொழுது இராணுவத்தில் மேஜர் பதவிக்காக படித்துக் கொண்டிருக்கிறார். 47. மேலும் அவர் - இராணுவத்தில் பணியாற்றுபவர்கள் ஒரு பெரிய சோதனைக்காக (trial) அவரை அழைத்துச் சென்றனர். அவர் இந்தக் கூட்டத்தில் உட்காருவதற்கு முன்பு, அவருடைய கொள்ளுப்பாட்டி யார் என்றும், அவர்களுடைய வரலாறு என்னவென்றும், அவர்கள் என்னவாயிருந்தனரென்றும் கூட அவர்கள் நிரூபிக்க வேண்டிய அளவுக்கு அவருடைய வம்ச அட்டவணையை ஆராய்ந்தனர். 48. மேலும் அவர் கூட்டத்திலிருந்து வந்து, சில நண்பர்களுடன் நாங்கள் தங்கியிருந்த மலையின் உச்சிக்கு மேலேறிவந்து, ஊசியிலைகளையுடைய ஒரு புதர் மரத்தின் (சூரைச்செடி) கீழ் அங்கே என்னை சந்தித்து, "சகோதரன் பிரன்ஹாமே, நீர் எப்பொழுதாவது கேட்டதிலேயே மிக அதிக சலிப்படையச் செய்கிற காரியமாக இது உள்ளது. நான் சொல்ல முடியாத அல்லது எந்த தகவலையும் வெளியில் சொல்ல முடியாதவனாக அதிகமாக சத்தியம் பண்ணப்பட்டுள்ளேன், ஏனென்றால் நாங்கள் - அவர்கள் எங்களை பயபக்தியுடன் கூடிய உறுதிமொழியை எடுக்கச் செய்தனர்’ என்றார். ஆனால், "நான் இதைச் சொல்ல முடியாது: இராணுவமானது முடிவுக்கு வரப்போகிறது’ என்றார். ‘அவர்கள் இதற்கு மேலும் எந்த இராணுவத்தையும் கொண்டிருக்கப் போவதில்லை, வெறுமனே சுற்றிலும் ஒரு சில காவலர்களே இருப்பார்கள். இதற்கு மேலும் அவர்கள் விமானப் போக்குவரத்தைக் கொண்டு இருக்கப் போவதில்லை. வணிக பயன்பாட்டுக்காகவேயன்றி, வேகமான விமானங்களையும் மற்றவைகளையும் கட்டும்படியாக தங்களுடைய நேரத்தில் அவர்கள் கவனம் செலுத்தப் போவதில்லை. ஒரு விசையை வெறுமனே ஒரு முறை இழுப்பதன் பேரிலே தான் அவர்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அங்கே ஒரு சர்வ சங்காரம் வரும்’ என்றார். 49. அவர், "சகோதரன் பிரன்ஹாமே, இராணுவத்தினுடைய இரகசியங்கள் என்னவென்று பொது ஜனங்களுக்கு தெரிவதில்லை. இந்தப் பெரிய அதிகாரிகள் அறைக்குள்ளிருந்து பேசினபோது, அவர்களுடைய பிரதான விஞ்ஞானிகளில் ஒருவர் எழுந்து நின்று, "நான் ஒரு பழைய பார வண்டியையும் ஒரு பசுவையும் எடுத்து, மலைகளுக்கு பின்னால் ஓட்டிச் சென்று, நான் ஒரு துண்டு நிலத்தில் முட்டைகோசுயும் பீன்ஸ்யும் நட்டு, இதைக் குறித்த எல்லாவற்றையும் மறந்துவிட விரும்புகிறேன்’ என்று கூறும் அளவுக்கு, அங்கே அறையில், அவ்வளவு பயங்கரமான ஒரு இருள் வந்தது’ என்றார். 50. ஓ, அவர், "இந்த தகவலானது பொது ஜனங்களுக்கு தெரிய வருமானால், முழு உலகமும் ஒரு பெரும் அச்சத்திற்குள் போய்விடும்’ என்றார். ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவர், "அவர்களிடம் உள்ளன... இப்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் தங்களுடையவர்களை தீவுகளிலிருந்து திரும்பப் பெறுகிறார்கள்... அவர்கள் தங்களுடைய இராணுவப் படைகளை இங்கிலாந்திலிருந்தும் வெளியே கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே இருக்கும் ஏதோவொரு வகையான ஆயுதங்களைக் கொண்டுள்ள மகத்தான பெரிய கப்பல்கள் (barges) அவர்களிடம் உள்ளன. மேலும் முதலாவது ஏவுகணை ஏவப்படுவதற்காக அவர்கள் அப்படியே காத்துக் கொண்டிருக்கிறார்கள், ஒவ்வொரு தேசமும் ஒரே சமயத்தில் ஏவி விடுவார்கள். குலுக்கி தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டவைகளைத் தவிர அங்கே ஒரு சிறு புல் கிளையோ அல்லது ஒரு மலையோ பூமியின் மேல் விடப்பட்டிருக்காது’ என்றார். மேலும் அது எந்த நேரமும் சம்பவிக்கலாம். 51. ஓ, என்னவொரு இருளான நேரம்-! நீங்கள் கேள்விப்படுகிற பறக்கும் தட்டுகளைக் குறித்த இந்த எல்லா காரியங்களும்... ஜனங்களிடம் பேசினதாக உரிமைகோரின அந்த மனிதனோடுள்ள அந்தப் பேட்டியை நேற்று ரேடியோவில் நீங்கள் கேட்டிருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். அம்மனிதனை அவமதிக்க நான் விரும்பவில்லை, ஆனால் அவருடைய முழு அமைப்புமே வார்த்தைக்கு முரண்பாடாய் உள்ளது. அது சரியல்ல. செவ்வாய் கிரகத்தில் (Mars) அவர்களுக்கு மரணமேயிருக்காதாம், எவ்வாறு மரணமடையாமல் இருப்பது என்று நமக்குக் கற்றுக் கொடுப்பதற்காக அவர்கள் இங்கே வருகிறார்களாம். 52. ஆனால் அது நிரூபணத்திற்கு வரும்போது, அவர் அதை நிரூபிக்கக் கூடிய விதமாக ஒரு சிறு நிரூபணமும் அவரிடம் கிடையாது. அது வெறுமனே அவர் கோர்த்திருந்த ஏதோவொரு கற்பனை கருத்தாக உள்ளது. என்னுடைய அபிப்ராயத்தின்படி, அது தவறானது, ஏனென்றால் வேதாகமமானது அவர் கூறினதிலிருந்து வித்தியாசமாக கூறுகிறது. 53. பறக்கும் தட்டுகளைக் குறித்து நான் என்ன நினைக்கிறேன் என்பதை நான் சொல்லியாக வேண்டும். அவைகள் நிழலாட்டமாய் உள்ளன என்று நான் நம்பவில்லை. அவைகள் கற்பனை என்று நான் நம்பவில்லை. நான் நம்புகிறேன். மேலும் இது அதைச் சரியாக ஆக்குவதில்லை; இது வெறுமனே என்னுடைய கருத்து மட்டுமே. அவைகள் என்னவென்று கர்த்தர் இதை என்னிடம் சொல்லவில்லை. ஆனால் நான் வேதவாக்கியங்களை கவனிப்பதன் மூலமே, அங்கு தான் நாம் எல்லா காரியங்களையும் கண்டு கொள்கிறோம். 54. இயேசு, "சோதோமின் நாட்களில் எப்படி நடந்ததோ அப்படியே மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் நடக்கும்’ என்று கூறினார். அக்கினி விழுந்து சோதோம் பட்டணத்தை எரித்துப் போட்டு தரைமட்டமாக்கி, அப்பட்டணம் அழிந்து போவதற்கு முன்பு; இந்தக் காரியங்கள் உண்மையா இல்லையா என்று கண்டு பிடிப்பதற்காக உற்று நோக்கிப் பார்த்து, சோதனை செய்யும்படிக்கு பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட தூதர்கள் அங்கே இருந்தார்கள். 55. அந்தப் பெரிய அழிவு வருவதற்கு சற்று முன்பு விசாரணை செய்யவும், கண்டு பிடிக்கவும் தேவன் தமது தூதர்களை திரும்ப அனுப்புவதற்கு ஒத்ததாக இது இல்லையா. 56. தேவனுக்காக ஒரு தீர்மானம் செய்திருந்த ஒரு வயது சென்ற மனிதனிடத்தில் வந்து அவனிடம் விஜயம் செய்த ஒரு தூதனானவர் அங்கே இருந்தார் என்பதை நீங்கள் கவனித்தீர்களா; (உலகத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்ட அவன்) வனாந்தரத்தின் பின் புறத்திலிருந்த ஒரு கூடாரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான், ஏனென்றால் யாரோ ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவனுடைய செல்வம் அனைத்தையும் எடுத்து விட்டிருந்தார். ஆனால் அவனோ, "அதெல்லாம் சரி தான். நான் அப்படியே தேவனுடைய சித்தத்தில் இங்கே தங்கி இருப்பேன்’ என்று கூறினான். 57. இன்னும் சரியாகச் சொன்னால், உங்களுக்கு இலவசமாய் கொடுக்கக்கூடிய உலகத்திலுள்ள எல்லா பணத்தைக் காட்டிலும் நான் தேவனுடைய சித்தத்திலேயே இருப்பேன். அந்தக் கடைசியான தீர்மானம் செய்யப்பட்ட உடனே, கர்த்தருடைய தூதனானவர் ஆபிரகாமிடம் வந்து, "கிழக்கேயும், மேற்கேயும், வடக்கேயும், தெற்கேயும் நோக்கிப்பார்; ஆபிரகாமே, இவை அனைத்துமே உன்னுடையது’ என்றார். "சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்வார்கள்’ என்று வேதவாக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன. 58. அது என்ன வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது-? பூமியிலுள்ள சகல காரியங்களும் பூமியோடு அழிந்து போய் விடும், ஆனால் தேவன் ஒரு போதும் அழிந்து போக முடியாது. மேலும் நான் நம்புகிறேன் (நான் விசுவாசிக்கும்படி வழிநடத்தப்படுகிறபடி), அதாவது, வந்து பகுத்தறிகிற கர்த்தருடைய தூதனானவரின் படமானது... 59. ஆபிரகாமிடம் வந்த அந்த தூதனைக் கவனித்தீர்களா-? அவர் தம்முடைய முதுகு கூடாரத்தின் பக்கமாக திரும்பியிருக்க, அவர் ஆபிரகாமிடம் பேசிக் கொண்டிருந்த போது, "நான் உனக்களித்த என்னுடைய வாக்குத்தத்தத்தைக் காத்துக்கொள்ளப்போகிறேன்’ என்றார். ஓ, இந்நாளில் அவருடைய வாக்குத்தத்தத்தைக் காத்துக் கொள்ளும் தேவ தூதனுடைய எப்படிப்பட்ட ஒரு செய்தி-! உலகத்தினுடைய எல்லா அவிசுவாசமும், சந்தேகங்களும், தேவனை என்றுமே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது என்று நம்புபவர்களும் நாத்தீகர்களும், அவிசுவாசிகளும் தேவனுடைய வல்லமையை ஒருபோதும் அவமாக்கிப்போட முடியாது. அது அப்படியே அதே விதமாகவே சம்பவிக்கும். 60. "நான் என்னுடைய வாக்குத்தத்தத்தை நினைவு கூர்ந்தேன், நான் என் வாக்குத்தத்தத்தை நன்மையாகச் செய்யப் போகிறேன்.’ அவருக்குப் பின்புறத்திலிருந்த கூடாரத்தில் இருந்த சாராள் நகைத்தாள். 61. அவருடைய முதுகு கூடாரத்தின் பக்கமாய் திருப்பியிருக்க, அவர், "சாராள் ஏன் நகைத்தாள்-?’ என்று கேட்டார். 62. சாராள் வெளியே ஓடி வந்து, "நான் நகைக்கவில்லை’ என்றாள், ஏனெனில் அவள் பயந்து போயிருந்தாள். 63. ‘இது எவ்விதமான ஒரு மனிதனாக இருந்தது-? அப்படியானால் கோபுரத்தின் மேலிருந்த ஒரு ஜாமக்காரன் எம்மாதிரியான ஜாமக்காரனாய் இருந்தான் என்று வியப்படைகிறீர்களா-? நம்மோடிருக்கிற இது எம்மாதிரியான தனித்தன்மை உடையதாயிருக்கிறது-? அவருடைய முதுகு என் பக்கமாய் திரும்பியிருந்த போதிலும் கூடாரத்தில் நான் நகைத்ததை அவர் அறிந்து கொண்டார்.’ அவரே ஜாமக்காரன் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர் திரும்பியிருக்க, "ஆம், நீ நகைத்தாய்’ என்று கூறினார். அவளோ பயந்து போயிருந்தாள். 64. இப்பொழுது, இந்நாளில் அது மீண்டும் (சம்பவிப்பதை) நாம் கவனிக்கிறோம், கர்த்தருடைய வருகைக்கு சற்று முன்பாக, இந்த அதே மனித ஜீவிகள் (beings) மீண்டும் திரும்பி வர வேண்டியதாய் இருக்கிறது. நாம் சுற்றிலும் நோக்கிப்பார்த்து அவர்களின் குணநலன்களைப் பார்க்கிறோமா என்று வியப்படைகிறேன். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். இந்தத் திரளான விளங்காத மர்மமான காட்சிகள், சம்பவிக்கும் என்று இயேசு சொன்ன காரியங்களுக்கு மிகச்சரியாக இருக்கிறதா என்று வியப்படைகிறேன். "மேலே வானத்திலும் பூமியிலும் அடையாளங்கள் உண்டாகும்; தேசங்களுக்கிடையே தத்தளிப்பு உண்டாகும்; குழப்பமான நேரம் உண்டாகும்; பல இடங்களில் பூமியதிர்ச்சிகள் உண்டாகும்; இருதயம் செயலற்றுப்போய் மனிதன் மரித்துக் கொண்டிருக்கிறான்.’ ஸ்திரீகள் அல்ல, மனிதர்கள். ஸ்திரீகள் இருதயக்கோளாறினால் அடிக்கடி மரிப்பதில்லை; மனிதர்கள் தான் அவ்வாறு மரிக்கிறார்கள். அது அவ்வாறு சம்பவிக்கும் என்று இயேசு சொன்னதை நிறைவேற்றுகிறது. அது அவ்விதம் இருக்கும் என்று அவர் கூறினது மிகச்சரியாக உள்ளது. 65. மேலும் அப்படியானால், இந்நாளைக் குறித்து தீர்க்கதரிசிகள் எல்லாரும் எவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார்கள் என்று நாம் அவர்கள் பேரில் மணிக்கணக்காக (பேசிக்கொண்டே) போகையில், அது ஒருவரை, "ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது-?’ என்று கூச்சலிடச் செய்யாதா-? பென்டகனிடம் பதில் கிடையாது. ஐக்கிய நாடுகளிடம் பதில் கிடையாது. ஜெர்மனி, ரஷ்யா, அவர்கள் யாரிடமும் பதில் கிடையாது. விஞ்ஞானத்திடம் இதற்கான தீர்வு கிடையாது. யாரிடம் இதற்கான தீர்வு இருக்கிறது-? மதிற்சுவற்றின் மேல் இருக்கிற ஜாமக்காரனிடம் தான் இதற்கான தீர்வு இருக்கிறது. "ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது-?’ 66. ஜனங்களை ஆயத்தப்படுத்தி தேவனிடமிருந்து வருகிற எச்சரிக்கைகளை அவர்களுக்கு கொடுக்கிற ஜாமக்காரன் பரிசுத்தாவியானவரே. அவர் ஒரு ஜாமக்காரனாக அமர்த்தப்பட்டு இருக்கிறார். வியாதியஸ்தர் சுகமடைவதையும், குருடரின் கண்கள் திறக்கப்படுவதையும், செவிடரின் காதுகள் திறக்கப்படுவதையும், முடவர்கள் நடப்பதையும், முடமாயிருக்கிறவர்கள் ஆண்மானைப்போல துள்ளிக்குதிப்பதையும் (சகோ. பிரன்ஹாம் துள்ளிக்குதித்தல் leaping என்று கூறுவதற்குப் பதிலாக leaping என்று கூறி விடுகிறார் – மொழிபெயர்ப்பாளர்.) நாம் காண்கிறோம்: நிறைவேற்றுகிறது... அது என்ன-? அது கர்த்தருடைய வருகையை உந்தித் தள்ளுதலாகும். 67. இந்த காரியங்கள் மற்றும் இந்த எச்சரிக்கைகள் யாவற்றிற்கும் (பிறகும்), ஜனங்கள் தங்களுடைய மூடத்தனத்தை அடையும் நேரம் மட்டுமாக, அவர்கள் தொடர்ந்து தங்கள் பீர் விருந்துகளுக்குப் போகிறார்கள். மேலும் அவர்கள் கும்மாளம் போடுகிறார்கள், அவர்கள் நடனம் ஆடுகிறார்கள், புசிக்கிறார்கள், குடிக்கிறார்கள், பெண் கொண்டு, பெண் கொடுக்கிறார்கள். அது சம்பவிக்கும் என்று தேவன் சொன்னவிதமாகவே அவர்கள் செய்கிறார்கள்... அவர்களை நிறுத்த எந்த வழியும் இல்லை. 68. அதன் பிறகு நீங்கள் கவனிப்பீர்களானால், வெளிப்படுத்தல் 3-ன்படி, இந்த மகத்தான சபைக்காலத்தில், வருகைக்கு சற்று முன்பாக இப்பொழுதிருக்கிற இக்காலத்தில் விடிவெள்ளி நட்சத்திரத்தை கொடுத்திருக்கிறவராக இருந்தார். 69. ஏசாயா, "ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது-?’ என்று கூறின போது, அது எவ்வளவு வேதப்பிரகாரமானதாக இருந்தது என்பதைக் கவனியுங்கள். அவன், "விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் வருகிறது’ என்றான். என்ன-? விடியற்காலம் வருகிறது, ஆனால் விடியற்காலம் வருவதற்கு முன்பு இராக்காலம் வருகிறது. அது என்னவாக இருந்தது-? ஒரு நாளில் முதலாவது சூரிய வெளிச்சம் தோன்றுவதற்கு சற்று முன்பு, பகற்காலம் சமீபமாயிருக்கும் அந்த மணி நேரத்தில், அது எப்பொழுதும் இருந்ததைக் காட்டிலும் இருளாக மாறுகிறது என்பதை எவருமே அறிவர். 70. ஓ, என் நண்பர்களே, "கர்த்தர் உரைக்கிறதாவது-!’ என்பதற்கு செவி கொடுங்கள். நீங்கள் என்னை அவருடைய ஊழியக்காரனாக எண்ணினால், இது நாளின் முதலாவது பகல் வெளிச்சம் தோன்றும் நேரத்திற்கு சற்று முன்புள்ள நேரமாக உள்ளது. அதன் காரணமாகத் தான் பூமியின் மேல் இந்த பயங்கரமான இருள் உள்ளது. இது கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு சற்று முன்புள்ள நேரமாகும். இதற்கு மேலும் அவருடைய வருகையைத் தவிர அங்கே வேறெந்த நம்பிக்கையும் எதிலும் விடப்படவில்லை. 71. தேசங்கள் தேசங்களுக்கு விரோதமாய் உள்ளன, அவர்கள் ஒருவர் மற்றவர் மேல் அணு சாம்பல்களை வீசியெறித்தக்க வல்லமையைக் கொண்டிருக்கும் அளவுக்கு தேவனுடைய சோதனைக் கூடத்தின் வழியாக அவர்கள் முட்டாளாக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் துன்மார்க்கராய் இருக்கிறார்கள், அவர்கள் பக்தி அற்றவர்களாய் இருக்கிறார்கள், கிறிஸ்துவைப் பின்பற்றாதவர்களாய் இருக்கிறார்கள். மேலும் அவர்களிடமுள்ள ஒரே நோக்கமும் குறிக்கோளும் என்னவென்றால் அழிப்பது தான். இந்த மனிதர்களை தூண்டுவதற் காக பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட, அழித்துப் போடும் தூதனாலே அவர்கள் ஏவப்படுகிறார்கள். 72. நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கூறட்டும், பரிசுத்த ஆவியானவர் கோபுரத்தின் மேலிருக்கிற ஒரு ஜாமக்காரனாக அனுப்பப்பட்டிருக்கிறார். மேலும், ஜனங்கள், "இரவு எவ்வளவு சென்றது-?’ என்று கதறுகையில். நீங்கள் இந்த ஜீவியத்தைக் குறித்து சலிப்படைந்துள்ளீர்களா-? நீங்கள் பாவத்தைக் குறித்து சலிப்jd aடைந்துள்ளீர்களா-? ஒவ்வொருவருடைய அடக்க ஊர்வலங்களைக் குறித்தும், வியாதியைக் குறித்தும், எல்லா பக்கங்களிலும் இருக்கிற தெய்வ பக்தியில்லாத நிலையைக் குறித்தும் நீங்கள் சலிப்படைந்துள்ளீர்களா-? இரவு நீண்டதாகவும், சலிப்பானதாகவும் இருக்கிறதா-? "ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது-?’ அவன், "விடியற்காலம் வருகிறது’ என்று கூறினான். ஆறுதலைப் பாருங்கள். "இராக்காலமும் வருகிறது.’ இரவு எவ்வளவு சென்றது-? 73. ஏசாயாவிலுள்ள வேத வாக்கியத்தோடு எவ்வளவு பரிபூரணமாகப் பொருந்துகிறது என்று பாருங்கள். இயற்கையின் வழக்கமான போக்கில், எப்போதுமே சூரியனானது நெருங்கி வருகின்ற போது, இருளானது ஒன்றாக வந்து அதை அந்தகாரப்படுத்துகிறது. இரவிலுள்ள மற்ற எந்த நேரத்தைக் காட்டிலும் பகலுக்கு முன்பு இருளாக உள்ளது. ஏன்-? வெளிச்சமானது சமீபமாயிருக்கிறது, அதுவே அதை இருளாகச் செய்கிறது. 74. கர்த்தராகிய இயேசுவின் (வருகை) நெருங்கிக் கொண்டிருப்பது தான், பூமியின் மேலிருக்கிற இந்த இருளைக் கொண்டு வருகிறது. "இவைகள் சம்பவிக்கத் தொடங்கும் போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலையை உயர்த்துங்கள்’ என்று அவர் கூறவில்லையா-? 75. பாலஸ்தீனா என்பது ஒரு தேசம். யூதர்கள் பூமி முழுவதிலுமிருந்து திரும்பி வருவார்கள் என்று தேவன் கூறின பிரகாரமாக, அவர்கள் பூமி முழுவதிலுமிருந்து திரும்பி வந்து, அவர்கள் அவர் வருவதைக் காண அங்கே அவ்விடத்தில் இருக்கிறார்கள். "அத்தி மரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக் கொள்ளுங்கள், அது துளிர்விடும் போது.’ அவர், "அப்படியே இவைகள் எல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாது, ஒழியாது – அது ஒருபோதும் முடிவடையாது’ என்றார். 76. எந்த சந்ததி-? அத்திமரம் துளிர்விடுவதைக் காணும் சந்ததி. இஸ்ரவேல் எப்போதுமே அத்திமரமாக இருந்து வருகிறது. "பச்சைப்புழு விட்டதை கம்பளிப்பூச்சி (caterpillar) தின்றது’ என்று யோவேல் கூறினான். "கம்பளிப்பூச்சி விட்டதை கொக்கிப்புழு (hookworm) தின்றது, கொக்கிப்புழு விட்டதை வெட்டுக்கிளி (locust) தின்றது.’ நீங்கள் கவனம் செலுத்துவீர்களானால், அது அதே பூச்சி தான். அந்த மரத்தைத் தின்ற அந்த பூச்சிகள் யாவுமே ஒரே பூச்சி தான், வித்தியாசமான நிலைகள் மாத்திரமே. 77. இயேசு, கிறிஸ்துவாக இருக்கவில்லை என்று யூதர்களைத் தின்று போடத் தொடங்கின அதே பாவமும் அவிசுவாசமும் தான் வெறுமையான அடிக்கட்டை வரை அந்த மரத்தைத் தின்றது... மேலும் தீர்க்கதரிசி அதைப்பார்த்து அழுதான். ஆனால் கர்த்தரோ, "முசுக்கட்டைப் பூச்சிகளும், வெட்டுக்கிளிகளும், பச்சைப்புழுக்களும் பட்சித்த எல்லா வருஷங்களின் விளைவை நான் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்’ என்றார். 2500 வருடங்களில் முதல் தடவையாக யூதர்கள் தங்களுடைய தாய் நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். "இந்த காரியங்கள் சம்பவிக்கும் முன்னே அந்த சந்ததி ஒழிந்து போகாது – ஒரு முடிவுக்கு வராது. அதன் பிறகு கடைசி நாட்களில் என் குமாரர்கள் மேலும் குமாரத்திகள் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று தேவன் உரைக்கிறார். அவர்கள் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள், நான் அற்புதங்களைக் காட்டுவேன்.’ 78. வியாதியஸ்தர் சொஸ்தமடைகிறார்கள். உட்கார்ந்து, அவருக்கு பின்னாக இருந்த அறையில் இருந்து நகைத்த சாராளைக் குறித்து ஆபிரகாமிடம் கூறக்கூடிய அதே ஆவியினால் மகத்தான வல்லமைகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அப்படியானால் நாம், "ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது-?’ என்று கூவி அழைக்கிறோம். 79. மேலும் அவன், "இராக்காலம் வருகிறது’ என்றான். இரவை முதலாவது கவனியுங்கள்... முதலாவது விடியற்காலம் வருகிறது, அப்போது இரவும் கூட வருகிறது. எப்போதுமே முதலாவது பகல் வெளிச்சம் வருவதற்கு சற்று முன்பு, வானங்களில் ஒரு மகத்தான வெளிச்சம் இருக்கிறது, அது தான் விடிவெள்ளி நட்சத்திரம். விடிவெள்ளி நடசத்திரமானது பிரகாசமாக, பிரகாசமாக, பிரகாசமாக ஆவதை நீங்கள் காணும்போது, பூமியானது இருளாக இருளாக ஆகிறது. பூமியானது இருளாக இருக்கிற காரணத்தினால் தான் அது பிரகாசமாக இருக்கிறது. 80. இந்தக் கடைசி நாட்களில், கிறிஸ்துவின் சரீரத்தில் தெரிந்து கொள்ளப்பட்டு, வெளியே அழைக்கப்பட்ட சபைக்கு விடிவெள்ளி நட்சத்திரத்தை அவர் கொடுப்பதாக வேதாகமத்தில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது. 81. "ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது-? என்ன சம்பவிக்கப் போகிறது-?’ இதோ அது உள்ளது: முழு உலகத்துக்கும் சர்வ சங்காரம் (total-annihilation) வருகிறது. ஆனால் அந்த சங்காரம் வருகிறதற்கு முன்பு, இயேசு கிறிஸ்துவின் சபையானது அவளுடைய கர்த்தரை சந்திக்கும்படி எடுத்துக் கொள்ளப்படுதலில் போய் விடும். 82. விடிவெள்ளி நட்சத்திரம் என்ன செய்கிறது-? நட்சத்திரங்களை அந்நேரத்தில் மிகப்பிரகாசமாக ஆக்குவது எது-? அது சூரியன் நெருங்கி வருகிற காரணத்தினால் தான். விடிவெள்ளி நட்சத்திரமானது சூரியனுடைய வெளிச்சத்தை பிரதிபலித்துக் கொண்டு இருக்கிறது. அந்த மணி நேரத்தில் மற்ற நட்சத்திரங்கள் ஒளியில்லாமல் காணப்படும். 83. மனிதனால் உண்டாக்கப்பட்ட வேத சாஸ்திரங்கள் யாவும், குளிர்ந்த, சம்பிரதாய முக்கியமற்ற காரியங்கள் யாவும் மறைந்து போய் விடும். ஆனால் அந்த ஜாமக்காரன் சீக்கிரமாக சமீபித்து வர இருக்கிற கர்த்தராகிய இயேசுவின் உண்மையான செய்தியை பிரதிபலித்துக் கொண்டிருக்கிற விடிவெள்ளி நட்சத்திரத்தோடு, அதோ அங்கிருக்கிற அந்த கோபுரத்தின் மேல் அமர்ந்திருக்கிறான், ஏனெனில் சூரியனானது உதிக்கத் துவங்குகையில், அவர் எல்லா நேரமும் பிரகாசமாகி பிரகாசமாகிக் கொண்டே இருக்கிறார். 84. ஓ, நான், "விடிவெள்ளி நட்சத்திரங்களே, தேவனுடைய மகிமைக்கு நேராக எழும்பி பிரகாசியுங்கள். நெருங்கி வருகிற நள்ளிரவுக்காக - பூமியின் மேல் இருள் இருக்கிறது, ஜனங்களின் மேல் முழுமையான இருள் இருக்கிறது’ என்று கூறுவேன். 85. ஆனால் விடியற்காலம் வருகிறது, நட்சத்திரங்கள் தங்கள் வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. முழு உலகத்தையும் நோக்கி இருக்கிற அந்த பயங்கரமான மணி நேரத்தைக் குறித்து எண்ணிப் பாருங்கள். இன்று இரட்சிக்கப்படாத ஒவ்வொரு நபருக்கும் எதிராக நிற்கிற அந்த பயங்கரமான இருளைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். செழிப்பாய் இருக்கிற தேசங்கள் யாவும், மலைகள் யாவும், பண்ணைகள் யாவும், வீடுகள் யாவும் கண்ணிமைக்கும் நேரத்தில் மீண்டும் எரிமலை சாம்பலுக்கு தூளாக ஆகிவிடும். 86. ஆனால் கர்த்தரை நேசிக்கிறவர்களும், விடிவெள்ளி நட்சத்திரத்தினுடைய வெளிச்சத்தைக் கொண்டிருப்பவர்களும், அவர்கள் தங்களுடைய கண்களை உலகத்தின் காரியங்களை விட்டு விலக்கி, அவர் மேல் பதித்து இருக்கிறார்கள்... 87. பவுல் பூமியை விட்டு போவதற்கு முன்பு, தன்னுடைய கடைசி நிரூபத்தை எழுதும் போது, அவன் சோர்வடைந்தவனாகவும், பதட்டமாகவும், களைப்படைந்தவனாகவும் இருந்தான். ஓ, அச்சிறிய யூதன், "ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக. நான் நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் அங்கே இருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்’ என்று கூறினபோது, நான் அவனுக்காக எவ்வளவாக இரக்க உணர்ச்சி கொள்கிறேன். அப்போது அவன் விடிவெள்ளி நட்சத்திரங்கள் வந்து கொண்டிருப்பதைக் குறித்து எண்ணினான். அவன், "எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்’ என்றான். 88. ஓ, நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள், உங்கள் மீட்பு சமீபமாயுள்ளது. "ஜாமக்காரனே, எது செய்தித்தாள்கள் இதைக் கூறும்படி செய்கின்றன-? எது விஞ்ஞானம் இயங்குவதற்கு பயத்தை உண்டு பண்ணுகிறது-? பென்டகனானது தகவலை வெளியில் சொல்ல எது பயத்தை உண்டு பண்ணுகிறது-? காரணம் என்னவெனில், ஜனங்கள் தங்களுடைய பணத்தை தெருவிலும் (மற்ற) காரியங்களிலும் எரிந்து விட்டு தற்கொலை செய்து கொள்வார்கள். என்ன - என்ன காரியம்-? இது என்ன-? இரவு எவ்வளவு சென்றது-?’ விடியற்காலம் வருகிறது. அது உண்மை. இது எல்லாவற்றையும் குறித்தென்ன-? அது விடியற்காலம் வரும்படி செய்கிறது. மேலும் அது (வெளிச்சத்தை) முன்னோக்கித் தள்ளுகிறது, வெளிச்சமானது பிரகாசிப்பதற்கு சற்று முன்பு, அது அடர்த்தியான இருளை வரச் செய்கிறது. 89. நான் ஒரு கிறிஸ்தவனாக இருப்பதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் அவருடைய ஜாமக்காரனாக இருப்பதற்காகவும், நான் அவர்களில் ஒருவனாக இருப்பதற்காகவும் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்; கோட்டை சுவரின் மேல் நின்று கொண்டு, "தேவனை சந்திக்க ஆயத்தப்படு, அவருடைய வருகையின் வேளையானது சமீபமாயிருக்கிறது’ என்று கூக்குரல் இடுவதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 90. அந்த மகத்தான பரிசுத்த ஆவியாகிய அதிகாலை விடிவெள்ளி நட்சத்திரமானது அதன் வெளிச்சத்தை உங்கள் இருதயங்களில் பிரதிபலிப்பதைக் குறித்து உறுதியில்லாமல் இருக்கிற ஒருவர் இக்காலை வேளையில் இங்கே இந்த சபையில் இருந்தால், நீங்கள் அதற்காக ஆயத்தப்படுவீர்களாக. எப்பொழுதும் சம்பவித்ததிலேயே மிகப்பெரிய ஒரு சம்பவம் நடப்பதற்கு இப்பொழுது சமீபமாயுள்ளது. சம்பவித்துக் கொண்டிருக்கிற ஒரு நாடகத்தைப் பார்த்துக் கொண்டே நாம் ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருக்கிறோம். 91. நான் அநேக தடவைகள் திரைப்படங்களைப் (ம்ர்ஸ்ண்ங்ள்) பார்த்திருக்கிறேன். எப்படியாக, ஹாலிவுட்டிலும், வித்தியாசமான இடங்களிலும் அவர்கள் தங்களுடைய நாடகங்களை தயார் செய்கிறார்கள். அவர்கள் எப்படியாக தங்களுடைய நட்சத்திரங்களையும் அவர்களுடைய மற்றவர்களையும் கொண்டு வந்து, சுற்றிலும் அவர்களை தயார் செய்கிறார்கள். மேலும் அந்த நாடகத்தை நடிப்பதற்கு முன்பு அவர்கள் எப்படியாக அவர்களுக்கு பயிற்சி கொடுத்து மற்றும் ஒவ்வொன்றையும் செய்கிறார்கள். அவைகளைக் கவனித்து அது போலியாகச் செய்யப்படுவதை அறியும் போது, அது எப்பொழுதுமே ஆச்சரியமாயுள்ளது. 92. எல்லா போலியான காரியங்களுமே உண்மையான காரியங்களிலிருந்து திருடப்படு கின்றன. ஒரு உண்மையான டாலர் நோட்டு இல்லாவிட்டால், ஒரு கள்ள டாலர் நோட்டு இருக்க முடியாது. ஒரு உண்மையான கிறிஸ்தவன் இல்லாவிட்டால் ஒரு மாய்மாலக்காரனும் இருக்க முடியாது. ஒரு உண்மையான செய்தி இல்லாவிடில் ஒரு கள்ள செய்தி இருக்க முடியாது. அங்கே ஒரு பகல் இல்லாவிட்டால் ஒரு இரவும் இருக்க முடியாது. நிச்சயமாக. 93. அவர்கள் தங்களுடைய நாடகங்களை ஆயத்தமாக்குவதைப் நான் பார்க்கும் போது, நான், "ஓ, அதோ அங்கிருக்கிற அந்த கோபுரத்தின் மேல் இவ்வுலகத்திலிருக்கிற எதற்கும் மேலே தொலைவில் நாம் நின்று கொண்டு, இந்த இரண்டு மிகப்பெரிய காரியங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்: காலமானது உருண்டோடிக் கொண்டிருப்பதையும் கர்த்தருடைய வருகை ஆகிய இரண்டு மிகப்பெரிய காரியங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என்று எண்ணினேன். சீக்கிரமாக இனி காலம் செல்லாது. இனி காலம் செல்லாது என்பதும், கர்த்தருடைய வருகை என்பதும் அங்கே உண்டாயிருக்கும். 94. மேலும் அந்திகிறிஸ்து அங்கே இருக்கிற தன்னுடைய பிரஜைகளைக் கொண்டிருக்கிறான். அவனிடம் கம்யூனிஸமும் வித்தியாசமான "இஸம்’களும் இருக்கின்றன. அவன் சபையிஸத் தையும், கத்தோலிக்க இஸத்தையும், புரட்டஸ்டன்ட் இஸத்தையும் கொண்டிருக்கிறான். ஒரு மகத்தான படக்காட்சியை போடுவதற்கான ஏற்பாடுகள் ஒவ்வொன்றையும் அவன் கொண்டிருக்கிறான். 95. ஆனால் இந்த மகத்தான நாடகத்திற்காக தம்முடைய கதாபாத்திரங்களை ஆயத்திபடுத்தியிருக்கிற ஒரு பிதாவும் கூட பரலோகத்தில் உண்டு என்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அந்திக்கிறிஸ்து யாவற்றையும் இந்த மரணத்திற்குள் சரியான வேளையில் கொண்டு வரும் போது, தேவனும் தாமே தமது சபையை நித்தியத்திற்குள்ளும், தேவனோடுள்ள நித்தியத்தின் பேரின்ப மண்டலங்களுக்குள்ளும் உயர்த்தும்படியாக தம்முடைய நாடகத்தை ஆயத்தம் செய்கிறார். இந்த அற்பமான பழைய சரீரங்கள் மறுரூபமாகி, அவருடைய சொந்த மகிமையான சரீரத்துக்கு ஒப்பாக மறுரூபமாகி விடும். அழிவுள்ளதாகிய இது அழியாமையைப் பெற்றுக் கொள்ளும், அவருடைய சாயலில் நாம் என்றென்றுமாக நிற்போம். 96. கவனியுங்கள், தொலைக்காட்சியைப் பார்க்கிற நீங்கள், வானொலியைக் கேட்கிற நீங்கள், செய்தித்தாள்களை வாசிக்கிற நீங்கள், செய்திகளைக் கேட்க வாஞ்சிக்கும் நீங்கள் இது என்னவென்று வியப்படைகிறீர்கள்; என்னுடைய சத்தத்திற்குச் செவி கொடுங்கள்-! விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் கூட வருகிறது. விடியற்காலத்திற்காக ஆயத்தமாய் இருக்கிறவர்களுக்காக விடியற்காலம் வருகிறது, மேலும் விடியற்காலத்திற்கு ஆயத்தம் இல்லாமல் இருக்கிறவர்களுக்காக இராக்காலம் வருகிறது. நித்திய வெளிச்சத்தையும் தெளிவான வானத்திலுள்ள சூரிய வெளிச்சத்தையும் திடீரென்று மாற்றிவிடுகிற விடியற் காலத்திற்காக தேவன் நம்முடைய இருதயங்களை இன்று ஆயத்தப்படுத்துவாராக. "அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் வானத்துக்கு அப்பாலுள்ள தங்களுடைய வீடுகளில் ஒன்று கூடுவார்கள். அவ்விடத்தில், பெயர்ப்பட்டியிலில் (பெயர்) கூப்பிடும் போது, நான் அங்கு இருப்பேன்’ என்று கவிஞன் கூறினது போல. நாம் ஜெபிப்போமாக. 97. தேவனாகிய கர்த்தாவே, பூமியின் மேல் இருளாகவும், ஒவ்வொருவர் மேலும் அழிவும் இருக்கிற இந்த மணி நேரத்தில், இயேசு கிறிஸ்து மகிமையிலிருந்து கீழே இறங்கி வந்து, எங்களைப் போன்ற ஒரு மனிதனாகி, எங்கள் மத்தியில் வாசம் பண்ணுவதைக் குறித்து எங்களுடைய இருதயத்தில் நாங்கள் எவ்வாறு உணருகிறோம் என்றும், எவ்வளவு நன்றி உள்ளவர்களாயிருக்கிறோம் என்றும், எவ்வளவு நன்றியுணர்வு கொண்டிருக்கிறோம் என்றும் எங்களால் – எங்களால் சற்றும் வெளிப்படுத்த முடியாது. மேலும் அதன் பிறகு அவர் எங்கள் பாவங்களுக்காக மரித்த போது, பரதீசில் வந்து, காத்துக் கொண்டிருந்த ஆத்துமாக்களை உடன் அழைத்துச் சென்றார்; பூமியைக் கட்டி வைத்திருந்த பிசாசின் ஒவ்வொரு ஆவிக்குரிய வல்லமையையும் உடைத்துப் போட்டு தொடர்ந்து வெற்றி பெற்றார், ஆகையால் அதை ஏற்றுக் கொள்ள விரும்புகிறவர்கள் மேல் தேவனுடைய நித்திய கிருபையின் சூரிய வெளிச்சமானது பிரகாசிக்க முடிகிறது... 98. தேவனே, எங்கிலுமுள்ள மனிதர்கள் வேகமாக துரிதப்பட்டு, இராஜ்யத்திற்குள் வரும்படி இன்று அருளும், செய்தியானது எப்போதுமே மிக அவசரமானதாக இருந்து வருகிறது. "துரிதப்படுங்கள், துரிதப்படுங்கள். வெளியே வாருங்கள்-!’ சோதோமில் தூதன், "நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது’ என்றான். 99. கர்த்தாவே, செய்தியானது மிக அவசரமானதாக இருந்தாலும், கிருபையும் வல்லமையும் அன்பும் நிறைந்ததாய் அருளப்படுகிறது. மனிதர்கள் தீவிரமாய் வந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, பரிசுத்த ஆவியினால் நிறையப்படுவார்களாக, இதை அருளும் கர்த்தாவே. இயேசு, "தேவனுடையவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுக்கிறார்கள்’ என்று கூறியிருக்கிறார். அவர்கள் வந்து தங்களுடைய பாவங்களுக்காக மனஸ்தாபப்படுவார்களாக; அவர்களுடைய பாவ மன்னிப்புக்கென்று கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று பரிசுத்த ஆவியினால் நிறையப்படுவார்களாக; முதலாம் சபை எப்படி இருந்ததோ அந்நிலைக்கு அவர்களுடைய ஆத்துமாவை சீர்படுத்தும். நீர் வரும்போது, அது அவ்விதமே இருக்கும். 100. இந்த செய்திக்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம், கர்த்தாவே, நாங்கள் உம்பேரில் காத்திருக்கிற நேரத்தில், எங்களுடைய இருதயங்களின் நன்மைக்காக நீர் அதை ஆசீர்வதிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம். இயேசுவின் நாமத்தில், நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென். (ஒலிநாடாவில் காலியிடம் – ஆசிரியர்.) ஒவ்வொருவராய் அதன் நுழைவாயிலில் நுழைவோம், அங்கே சாகாமையுள்ளவரோடு வாழ்வோம், அந்த பென்னான மணியோசையை அவர்கள் ஒலிப்பர், உனக்காகவும் எனக்காகவும். 101. நீங்கள் அவரை நேசிக்கவில்லையா-? இப்பொழுது, செய்தி முடிந்து விட்டது; நாம் சற்றே அவரை ஆவியில் ஆராதிப்போம், அப்படியே... அவர் இங்கே இருக்கிறார். மகத்தான கண்டிப்பான வார்த்தைகள், ஆனால் அவைகள் சத்தியமாய் உள்ளன. நான் அவைகளை கிறிஸ்துவின் நாமத்தில் பிரசங்கம் செய்கிறேன். நெருங்கி வந்து கொண்டிருக்கும் அந்த நாள்... நீங்கள் என்னை நோக்குவீர்களானால், நான் இதை விரும்புகிறேன்... (ஒலிநாடாவில் காலியிடம் – ஆசிரியர்.) ... உனக்காகவும் எனக்காகவும் (சற்று நம்முடைய கரத்தை உயர்த்துவோம்.) நீங்கள் கேட்கவில்லையா... தூதர்கள் பாடிக்கொண்டிருப்பதை நீங்கள் கேட்கவில்லையா. இது மகிமை, அல்லேலூயா, யூபிலி. அந்த தொலைதூரத்தில் என்றென்றும் இனிமை, பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஆற்றிற்கு சற்று அப்பால், அந்த பொன்னான மணியோசையை அவர்கள் ஒலிப்பர், உனக்காகவும் எனக்காகவும். 102. அவள் அதை மீண்டும் இசைக்கையில், உங்கள் அருகிலுள்ள யாரோ ஒருவரோடு கரங்களை சற்று குலுக்குவோம். ... என்றென்றும் இனிமை, சற்று அப்பால்... விசுவாச அளவைக்கொண்டு மாத்திரமே அதின் கரையை நாம் அடைவோம்... ("யாத்திரீகரே, நான் உங்களோடு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று ஒருவர் மற்றவரிடம் கூறுங்கள்.) ... அதன் நுழைவாயிலில் நுழைவோம், அங்கே சாகாமையுள்ளவரோடு வாழ்வோம், அவர்கள் அந்த பொன்னான மணியோசையை ஒலிப்பர், உனக்காகவும் எனக்காகவும். அந்த மணியோசைகள் இப்பொழுது ஒலித்துக் கொண்டிருப்பதை நீங்கள் கேட்கவில்லையா, அந்த தூதர்கள் பாடிக்கொண்டிருப்பதை நீங்கள் கேட்கவில்லையா, (அது என்ன-?) இது மகிமை, அல்லேலூயா, யூபிலி. அந்த தொலைதூரத்தில் என்றென்றும் இனிமை, பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஆற்றுக்கு சற்று அப்பால், அவர்கள் அந்த... ஒலிப்பர், 103. அது அப்படியே என்னுடைய மனதில் ஒரு காரியத்தைக் கொண்டு வருகிறது. அங்கே பின்னாலிருக்கும் என்னுடைய மனைவிக்கு அது நன்றாக ஞாபகமிருக்கும். கலிபோர்னியாவிலுள்ள அந்த பழமையான பிஸ்கா சபை, வேதாகம கல்வி நிறுவனத்திற்கு (Pisgah Church, Bible Institute) செல்லும்படியான சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது. நான் அவர்களோடு ஒரு இரவு ஆராதனையைக் கொண்டிருந்தேன். அது தொடக்க முதலே உள்ள பழமையான மின் உற்பத்தி நிலையமாகும். என்னவொரு அற்புதமான இடம். நான் மேய்ப்பரான சகோ.ஸ்மித் அவர்களை சந்தித்தேன். அவர்கள் ஒரு பத்திரிகையை அச்சிட்டு வெளியிடுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். அவர்களுக்கு உதவி கிடைக்கிறது. அவர்கள் எந்த காணிக்கையையும் எடுப்பதில்லை. எல்லாமே இலவசம் தான். மேலும் அவர்கள் ஐம்பது சொச்சம் கூடுதல் வருடங்களாக அதைக் கொண்டிருக்கின்றனர். 104. ஊனமுற்றிருந்து, உதவிக்காக கலிபோர்னியாவுக்கு வந்த ஒரு மருத்துவரால் அது ஆரம்பிக்கப்பட்டது. மருத்துவர், "உங்களுக்கு எதுவும் செய்ய முடியாது’ என்றார். அது காலம் சென்ற டாக்டர். பிறைஸ் என்று நம்புகிறேன், அல்லது ஒரு காலை வேளையில் ஒரு அறையில் வைத்து அவருக்காக ஜெபித்த யாரோ ஒருவர். சரியாக அச்சமயத்தில் அவருக்கு எந்த முடிவும் உடனடியாகக் கிடைக்கவில்லை. அது எதையும் பொருள்படுத்திக் காட்டுவதில்லை. ஆகையால், அவர் வெளியே போகத் தொடங்கினார். அவர், "எப்படியாயினும் வேறொரு (தடவை) நடக்கும் என்று விசுவாசிக்கிறேன்’ என்று கூறினார். அவர் நடைபாதையைத் தாண்டி போகத் தொடங்கின போது, அவருடைய முடமான கால் நேரானது. அவர் பிஸ்கா காப்பகத்தைக் (Pisgah Home) கட்டினார். 105. அன்றொரு இரவு நான் அங்கே பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் அந்தப் பெரிய அரங்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்திருந்தனர். நாங்கள் பின்பக்கம் வழியாக உள்ளே செல்லும் முன்பே, நூற்றுக்கணக்கான பேர்கள் தெருக்கள் எல்லாவற்றிலும், ஒவ்வொன்றிலும் நின்று கொண்டிருந்தனர். மேலும் செய்தியானது முடிந்த பிறகு, ஏதோவொன்று சம்பவித்தது: என்னுடைய ஜீவியத்தில் இதற்கு முன்பு ஒருபோதும் சாட்சி கூறியிராத இரண்டு காரியங்கள் உண்டு. அதிக சத்தம் போட விரும்பின ஒரு கூட்டம் ஜனங்களாக அவர்கள் இருக்கவில்லை. தூங்கி வழிந்தபடி உட்கார்ந்திருக்கிற ஒரு கூட்டம் ஜனங்களாக அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் ஆவியால் நிறையப்பட்ட ஜனங்களாக இருந்தனர். மேலும் அந்த அற்புதமான ஐக்கியத்தை நான் அனுபவித்தேன். 106. மேலும் நான் - நாங்கள்... நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க செல்வதற்கு சற்று முன்பு, அவர்கள் அதைப்போன்று இனிமையாக பாடத் தொடங்கினர். நான் நின்று அதிசயித்தேன். நான், "இங்கே ஏதோவொன்று தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது, நான் அதைப் புரிந்து கொள்ளவில்லை’ என்றேன். நான் மீண்டும் கவனித்துக் கேட்டேன், நான் இரண்டு பாடகர் குழுவினர் (பாடுவதைக்) கேட்டேன். நான், "அங்கே ஏதோவொன்று தவறாக இருக்க வேண்டும்’ என்றேன். மேலும் நான் மீண்டும் என்னுடைய தலையை என் காதுகள் வரை அசைத்துக் (கேட்டேன்). நான், "ஓ, கர்த்தாவே, இது ஒருக்கால் இங்கிருக்கும் இந்தப் பாடல் குழுவிடமிருந்து வரும் எதிரொலியாக இருக்கலாம்’ என்றேன். நான் இங்கே மேலே அதே மேற்கூரையிலிருந்து வேறொன்றைக் கேட்டேன். ‘அது அங்கே மேலிருந்து வந்திருக்க வேண்டும்’ என்றேன். 107. ஆகையால், நான் இங்கே ஊழியக்காரர்கள் இருக்கிற அடித்தளத்திலிருந்து பாடல் குழுவினர் இருக்கிற மேல்தளத்திற்கு நடந்து சென்றேன். அது அங்கே மேலே இருந்தது. நான் - நான் என்னுடைய மனைவியிடம், "தேனே, அது உனக்குக் கேட்கிறதா-?’ என்று கேட்டேன். அவள், "அது என்ன-?’ என்றாள். நான், "சகோதரி ஆர்கன் பிரைட் அவர்களே, அது உங்களுக்குக் கேட்கிறதா-?’ என்றேன். அவர்கள், "ஆமாம். நான் அதை என்னுடைய ஜீவியத்தில் முன்பு ஒருமுறை கேட்டிருக்கிறேன்’ என்றார்கள். நான் சகோதரன் ஆர்கன்பிரைட் அவர்களிடம் சென்று, "அது உமக்குக் கேட்கிறதா-?’ என்றேன். "ஆம்’ என்றார். அவர்கள் ஒவ்வொருவரும் தலைகளைத் தாழ்த்திப் பாடிக் கொண்டிருந்தனர். 108. ஓ, நான், "ஒருக்கால்... நான் – நான் நிச்சயமாய் இருக்க விரும்புகிறேன். நான் ஒரு நாஸ்திகனாக இருக்க விரும்பவில்லை. ஆனால், கர்த்தாவே, நான் உம்முடைய சாட்சியாக இருந்தால், நான் ஒரு ஜாமக்காரனாக இருந்தால், நான் எதைக் குறித்து பேசிக் கொண்டு இருக்கிறேன் என்பதை நான் அறிந்திருக்க வேண்டும். நான் இதைக் குறித்து நிச்சயமாய் இருக்க வேண்டும்’ என்றேன். தெய்வீக சுகமளித்தலைப் போன்று, நான் நிச்சயமுடையவனாக இல்லையென்றால், நான் அதைக் குறித்து எதையும் கூறப்போவதில்லை. கர்த்தருடைய வருகையைக் குறித்து நான் நிச்சயமில்லாதவனாயிருந்தால், நான் அதைக் குறித்து எதையும் கூறமாட்டேன். நான் நிச்சயமுடையவனாயிருக்க வேண்டும். 109. நான் அடித்தளத்திற்கு மீண்டும் கிழிறங்கிச் சென்றேன்; ஒவ்வொருவரும் தங்கள் தலைகளைத் தாழ்த்தி இருந்தனர். மேலும் பீட அழைப்பில், ஜன்னலில் தங்கள் கரங்களை வைத்திருந்த அநேக ஜனங்கள் கிறிஸ்துவினிடம் வந்து கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் பாடிக்கொண்டிருந்தனர். நான் இங்கே கீழே வந்த போது, நான், "கர்த்தாவே, அது அவ்வாறு இருக்க முடியாது’ என்றேன். இங்கே கீழே பாடிக்கொண்டிருந்த இந்த ஜனங்கள் வெறுமனே சாதாரண ஜனங்களாக இருந்தனர். ஆனால் இங்கே மேலிருந்த இதுவோ - அது ஒரு சிலராக இருப்பது போல் ஒலித்தது, ஒருக்கால் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் பேர் இங்கே பாடிக் கொண்டிருக்கலாம். ஆனால் அங்கே மேலே ஒருக்கால் 100,000 பேர் இருப்பது போல் காணப்பட்டது. அது இனிமையான பாடல் சத்தங்களில் ஒன்றாக இருந்தது; அது ஸ்திரீகள் பாடல் பாடும் சத்தங்களைப் போன்று மிகவும் உயர்ந்த உச்ச குரல் இசை ஓசையாக இருந்தது. 110. நான் அதைக் கவனித்துக் கேட்டேன், அப்படியே என் மேல் முழுவதுமாக நடுக்கம் வேகமாகப் பரவிச் சென்றது. நான் சற்றே ஒரு நிமிடம் மீண்டும் திரும்பிச் சென்றேன். நான் கவனித்துக் கேட்டேன். நான் மேலே உயரே நடந்து சென்று விட்டு, திரும்பி வந்தேன், ஏனெனில் அவர்கள் அப்படியே தொடர்ந்து ஆவியில் பாடிக் கொண்டிருந்தனர். நான் மீண்டும் கவனித்துக் கேட்டேன். அது இந்த சத்தமாக இருக்கவில்லை. நான் இங்கே கீழே அவர்கள் இடத்தில் ஒருவிதமான சத்தத்தையும், இங்கே மேலே வேறொரு விதமான சத்தத்தையும் கேட்க முடிந்தது. எனவே ஆராதனை முடிந்த பிறகு, நான் மேய்ப்பரிடம், "மேய்ப்பரே, நான் – நான் வினோதமான ஏதோவொன்றைக் கேட்டேன்’ என்றேன். அவர், "சகோதரன் பிரன்ஹாமே, அது என்ன-?’ என்று கேட்டார். 111. நான், "நான் – நான் ஸ்திரீகளுடைய உச்சகுரல் இசை ஓசையையும், அதிக பயிற்றுவிக்கப்பட்ட பாடல் பாடும் சத்தங்களையும் கேட்டேன். அங்கே மேலே நான் என் ஜீவியத்தில் எப்பொழுதும் கேட்டதிலேயே அது மிகவும் அருமையானதாக இருந்தது’ என்றேன். அவர், "சகோதரன் பிரன்ஹாமே, நான் இங்கே அதை அநேக தடவைகள் கேட்டிருக்கிறேன்’ என்றார். 112. நான் வயதான தாயாரைக் குறித்து வாசித்திருந்தேன் (ஓ, நான் இப்பொழுது அவர்களுடைய பெயரை மறந்து விட்டேன்.) அவர்கள் வழக்கமாக வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறவர்கள். மேலும் ஒரு இரவில், மேய்ப்பர் தம்முடைய பிரசங்கத்தை பேசி முடித்த பிறகு, அந்த தாயார் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படியாக கீழே வந்தார்கள். அவர்களைச் சுற்றிலும் ஐந்து அல்லது ஆறு சிறு குழந்தைகளை அவர்கள் கொண்டிருந்தார்கள். மேலும் அவர்கள் நிறுத்தி விட்டு, மேலே கவனித்தார்கள். அது திருமதி. உட்ஸ்வொர்த் எட்டராக இருந்தது, நீங்கள் யாவரும் எப்பொழுதாவது அவர்களுடைய புத்தகத்தை வாசித்திருந்தால்-? அவர்களும் கேட்டு விட்டு, "சபையில் பாடுகிற பாடல் குழு மேலே பாடிக் கொண்டு இருக்கிறார்கள்’ என்றார்கள். இங்கே கீழே சத்தங்கள் ஓய்ந்த பிறகும், அது அப்பொழுதும் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தது. பாருங்கள்-? 113. நான் அங்கே நின்றேன், சற்று பிறகு கட்டிடத்தின் பின்னாலுள்ள வழியில் சென்றேன், அது எவ்வளவு ஒழுங்காகவும் பரிபூரணமாகவும் உள்ளது என்பதைப் பாருங்கள்... இப்பொழுது, நான் – நான் அந்நிய பாஷை பேசுவதில் நம்பிக்கை கொண்டவன். அது சபையிலுள்ள தேவனுடைய ஒரு வரம் என்று நான் விசுவாசிக்கிறேன். மற்ற வேதவாக்கியங்கள் தவறாக பயன்படுத்தப் பட்டிருப்பதைப் போன்று இதுவும் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று நம்புகிறேன். ஆனால் அங்கே ஒரு உண்மையான ஒன்று உள்ளது, ஆம். 114. மேலும் இம்மனிதன் கட்டிடத்தின் பின்பாகத்தில் (பின் வழியில்) எழுந்து நின்று, வேறு பாஷையில் ஏறக்குறைய நான்கு அல்லது ஐந்து வார்த்தைகள் பேசினான். அது வெறுமனே ஒரு ...இருக்கவில்லை. அது ஒரு - ஒரு பிரதேச மொழியாக இருந்தது; உங்களால் அதைக் கேட்க முடியும். யாவரும் அமைதியாக இருந்தனர். மேலும் ஏதோவொன்று என்மேல் அசைவாடியது. நான் என் ஜீவியத்தில் ஒருபோதும் அர்த்தம் உரைத்ததே கிடையாது, நான் அப்பொழுது அதை உபயோகப்படுத்தவில்லை, ஏனென்றால் நான் பயமடைந்திருந்தேன். அந்த காரியங்கள் தேவனுடையவைகளாக இருக்கின்றன. நீங்கள் அவைகளோடு முட்டாளாக்கிக் கொள்ளாது இருப்பது மேலானது. 115. மேலும் ஏதோவொன்று என்னிடம், "மேய்ப்பர் விசுவாச ஜெபத்தை ஏறெடுக்க வேண்டும்’ என்று கூறினது. நான் என்னுடைய வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டியதாயிருந்தது. மேலும் நான் காத்திருந்தேன், இதோ அது மீண்டும் வருகிறது, சுழன்று அடிக்கும் அலை போன்ற அசைவு வந்து, "மேய்ப்பர் விசுவாச ஜெபத்தை ஏறெடுக்க வேண்டும்’ என்று கூறினது. நான், "கர்த்தாவே, எனக்கு அர்த்தம் உரைக்கும் வரங்கள் கிடையாது. நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கவே இருக்கிறேன். ஆகையால் எனக்கு அர்த்தம் உரைக்கும் வரங்கள் கிடையாது’ என்று எண்ணினேன். நான் மீண்டும் என்னுடைய வாயை மூடிக் கொண்டு அமைதியாக நின்றேன். சற்று கழிந்து மேய்ப்பர் எழுந்து நின்று வியாதியஸ்தருக்காக ஜெபிக்கத் தொடங்கினார். 116. ஓ, அவர் தேவனாக இருக்கிறார்-! கட்டிடம் எங்கிலும் எல்லாவிடங்களிலும் வியாதிகள் சுகமாயின. அது என்ன-? நாளின் முதலாவது வெளிச்சம் வரும் நேரம். அங்கே ஒரு சிறு கிளையானது இன்னும் விடப்பட்டிருக்கிறது. கவலைப்பட வேண்டாம். தேவன் ஒரு சாட்சியும் இல்லாமல் ஒருபோதும் இருந்ததேயில்லை. ஏதோவொரு மகத்தான இயற்கைக்கு மேம்பட்டது எங்கேயோ உள்ளது என்பதை இப்பொழுது நம்புங்கள், அது ஒரு தூதனுடைய சத்தமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஏதோவொன்று ஒவ்வொரு பாவியையும் – அப்படிப் பட்டவர்கள் இக்கட்டிடத்தில் இருந்தால் – இரவானது பூமியின் மேல் இருளாக இருளாக ஆகி, அடர்த்தியான அந்தகாரமான இருளாக முடிக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆனால் கர்த்தருடைய வருகையானது சமீபமாயிருக்கிறது, அதை செய்வது என்ன. 117. உங்களுடைய ஜாமக்காரனைப் போல, நான், "விடியற்காலம் வருகிறது. விடிவெள்ளி நட்சத்திரங்களே, ஆயத்தமாகுங்கள்; பிரகாசியுங்கள்’ என்று கூறுகிறேன். நாம் இங்கிருந்து போவதற்கு முன்பு, கடைசி ஜெபத்தில் எத்தனை பேர் நினைவுகூரப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்-? சற்று உங்கள் கரங்களை உயர்த்துங்கள். 118. அன்புள்ள தேவனே, ஜனங்கள் தங்களுடைய கரங்களை உயர்த்துகிற இந்நேரத்தில் நீர் அவர்களைக் காண்கிறீர். அவர்கள் இதில் உத்தமமாயிருக்கிறார்கள். செய்தித்தாள்களை தேடுகிறவர்களில் அநேகர் தத்துவமேதைகளின் புத்தங்களையும், பல்வேறான காரியங்களை கொண்ட கட்டுரைகளையும் தேடியிருக்கிறார்கள், ஆயினும் அவர்களால் எந்த பதிலையும் காண முடியவில்லை. ஆனால் இக்காலை வேளையில் வேதாகமத்தில் இதோ அது வருகிறது, "விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் கூட வருகிறது.’ 119. மேலும், தேவனே, தங்கள் கரங்களை உயர்த்தியுள்ள ஒவ்வொரு நபரையும் நீர் ஆசீர்வதிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். உயர்த்தப்பட்டிருக்கிற அந்த கரத்தின் பின்னால் என்ன உள்ளதென்று உமக்குத் தெரியும். மேலும், கர்த்தாவே, அவர்கள் இம்மணிநேரத்தில் தேடிக் கொண்டிருக்கும் அவர்களுடைய ஆவியின் சுதந்தர வீதத்தை சரியாக அவர்கள் அமர்ந்து இருக்கிற இடத்திலேயே அவர்களுக்கு பகிர்ந்தளிக்கும்படியாக எங்கும் நிறைந்து இருக்கிற தேவன் வல்லமையுள்ளவராக இருக்கிறார் என்பதை நான் விசுவாசிக்கிறேன். 120. கர்த்தாவே, உம்முடைய வார்த்தையின் நிமித்தமாகவும், அவர்களுடைய வாஞ்சையின் நிமித்தமாகவும் ஒவ்வொருவருக்கும் அருளும். உம்முடைய தெய்வீக வாக்குத்தத்தம் தவறிப் போக முடியாது. அவர்கள் சார்பாக நான் இந்த ஜெபத்தை ஏறெடுக்கையில், தங்களுடைய கரங்களை உயர்த்தியிருப்பவர்கள் அதைப் பெற்றுக் கொள்வார்களாக. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், அவர்கள் அதைப் பெற்றுக் கொள்வார்களாக. ஆமென். தேவன் உங்களோடு இருப்பாராக. 121. இப்பொழுது, நமக்கு கொஞ்ச நேரமே உள்ளது... இப்பொழுது, நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகிறோம். வியாதியாயிருப்பவர்களுக்கு நம்பிக்கை உண்டு என்பதை அறிவதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். "உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிற கர்த்தர் நானே.’ மேலும் நான் சற்று... அது இருக்கிறபடி வினோதமாயுள்ளது, நான் சிறிது நேரத்திற்கு முன்பு இந்த தூக்குப் படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கிற ஒரு வாலிப தாயாரிடம் போனேன். அவள் ஹாட்ஜ்கின் வியாதியால் பாதிக்கப்பட்டவள். இங்கே அவளோடு உட்கார்ந்திருப்பது அவளுடைய தாய் என்று நம்புகிறேன்; நான் அதைக் குறித்து மிகவும் நிச்சயம் உடையவனாயிருக்கிறேன். ஆம், அது சரியே. 122. ஆனால் இந்த தாயார் தன்னுடைய குழந்தையைக் குறித்து என்னிடம் கூறிக் கொண்டிருந்தாள். நானோ அவளை தைரியப்படுத்தும்படி முயற்சித்துக் கொண்டிருந்தேன். இச்செய்திக்குப் பிறகு இது வெறுமனே ஓர் அழைப்பாக உள்ளது, இரட்சிப்பு தான் முதலாவது காரியம் என்று நான் உணருகிறேன்; சுகமளித்தல் இரண்டாவது காரியமே. வியாதியிலிருந்து சுகம் பெறுதலானது உங்களுடைய ஜீவியத்தின் முடிவு வரையில் அநேக வருடங்கள் ஒருக்கால் நீடித்திருக்கலாம். அது ஒருக்கால் நீங்கள் இங்கே பூமியில் இருக்கிற நேரத்தில் உங்களுக்கு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் தரலாம், ஆனால் உங்களுடைய - உங்களுடைய மரணத்தின் போது, அது முடிந்து போய் விடும். 123. ஆனால் இரட்சிக்கப்பட்ட ஒரு ஆத்துமா நித்திய ஜீவனைக் கொண்டிருக்கிறது. அது அழிந்து போக முடியாது, அல்லது எதுவுமே அதை உங்களை விட்டு ஒரு போதும் எடுத்துப் போடவே முடியாது. அது கடைசி நாட்களில் உயிரோடெழுப்பும்படியாக தேவனுடைய புஸ்தகங்களுக்குள் போய் விட்டது. அம்மகத்தான காரியம் தான் முதலாவது காரியமாக இருக்கிறது. முதலாவது தேவனுடைய இராஜ்யமும் அதன் நீதியும்; மற்ற காரியங்கள் அதனோடு கூடக் கொடுக்கப்படுபவை ஆகும். 124. இந்த பயங்கரமான வியாதியிலிருந்து சுகமடைந்ததைக் குறித்த ஒரு சாட்சியை நான் கூற விரும்புகிறேன், இந்த வாலிப பெண் அதே வியாதியினால் அவதிப்படுகிறாள். கொஞ்ச காலத்திற்கு முன்பு... (அவர்கள் ஒருக்கால் இக்காலையில் இங்கேயிருக்கலாம், யார் யார் இருக்கிறார்கள் என்று அறிவதற்கு நான் அடிக்கடி இங்கே இருப்பதில்லை; உங்களில் அநேகரை எனக்குத் தெரியாது.) ஆனால் இங்கே நமது உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த ஒரு வாலிப பெண் அங்கேயிருந்தாள், அவள் இந்த ஹாட்ஜ்கின் வியாதியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள், அவள் மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டாள், அவளிடமிருந்த பெரிய கட்டிகள் உடைந்து போயிருந்தன. 125. அவர்கள் அந்தக் கட்டியில் ஒரு துண்டை வெட்டியெடுத்து, அது என்னவென்று கண்டறியும்படியாக அதை அனுப்பினார்கள், ‘அது குணப்படுத்த முடியாத ஹாட்ஜ்கின் வியாதி’ என்ற செய்தி திரும்ப வந்தது. அந்த பிள்ளைக்கு என்ன வியாதியிருக்கிறது என்று அப்பிள்ளை அறிந்து கொள்ள அந்த தாயார் விரும்பவில்லை. அவள் அப்படியே பள்ளிக்குப் போய்க் கொண்டிருக்கட்டும் என்று அந்த தாயாருக்கு மருத்துவர் ஆலோசனை கூறினார், ஏனென்றால் அவள் அப்படியே அதிக நாட்கள் ஜீவிப்பவளாயிருந்தாள். இறுதியாக அது இருதயத்தின் மேல் உடைந்து போனது. ஹாட்ஜ்கின் வியாதியானது புற்று நோயின் ஒரு வடிவமாகும் என்பதை நாம் அறிவோம். 126. ஆகையால் அவள் மரிக்கும் மட்டுமாக அந்த வாலிப பெண்ணை திரும்பவும் பள்ளிக்கு அனுப்பினார்கள். அந்தத் தாயார் உணர்ச்சி பெருக்கோடு பித்து பிடித்தவளைப் போல் இருந்தாள். அவள் என்னைத் தொலைபேசியில் அழைத்து, ‘நான் அவளை அழைத்து வர விரும்புகிறேன். ஆனால் சகோதரன் பிரன்ஹாமே, உம்முடைய ஜெப வரிசைகளில், அநேக நேரங்களில், ஆவியின் ஊக்குவித்தல் உம்மிடம் வரும்போது, என்ன வியாதிகள் உள்ளன என நீர் சத்தமிட்டுக் கூறுவதை நான் அறிவேன், (அதைப் போன்றே) பரிசுத்த ஆவியானவர் பிள்ளையைக் குறித்து எதையாவது வெளிப்படுத்துவாரானால், நீர் அதைக் கூற மாட்டீரா. நீர் இரக்கமாயிருப்பீரா’ என்றாள். 127. ‘நல்லது,’ நான், ‘அது அறியப்பட வேண்டுமென்று அவருக்கு விருப்பமில்லையெனில், அவர் அதை வெளிப்படுத்துவார் என்று நான் நினைக்கவில்லை. நான் அவ்வாறு நினைப்பதே கடினமானது, இங்கே என்னுடைய சொந்த கூடாரத்தில், நான் எப்போதாவது அம்மாதிரியான கூட்டங்களைக் கொண்டிருந்து, நான் வெறுமனே வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறேன்’ என்றேன். அந்த வாலிப பெண் ஜெப வரிசையில் வந்தாள், நான் அத்தாயாரிடம், ‘நீ ஒரு கிறிஸ்தவளா-?’ என்று கேட்டேன். அவள், ‘இல்லை’ என்று பதிலளித்தாள். நான், ‘இந்த சிறு பெண் கிறிஸ்தவளா-?’ என்று கேட்டேன். ‘இல்லை’ என்றாள். 128. நான், ‘உலகத்தை விட்டு வெளியே வருவதென்பது ஒரு பயங்கரமான வழிமுறையாகும்’ என்றேன். மேலும் நான் தொடர்ந்து, ‘அவள் அதே நிலைமையில் போவாளானால், நீ அவளை மீண்டும் ஒருபோதும் காணமாட்டாய்’ என்றேன். 129. ஆகையால், அக்காலையில் அந்த வாலிப பெண் அந்த அறைக்குள் வந்து, வாலிப பெண் ஜெபிப்பதற்காக இருந்த அதே இடத்தில் கடந்து சென்ற போது, (இந்த சிறு பெண்ணும் ஒரு சில நிமிடங்களில் அதே இடத்தில் இருப்பாள்.), நான் அவளிடம் கேட்டேன் (எனக்கு அவளைத் தெரியும்), நான், ‘உயர்நிலைப் பள்ளியிலிருந்து இங்கே வந்துள்ள வாலிப பெண் நீ தானா-?’ என்று கேட்டேன். அவள், ‘நான் தான்’ என்று கூறினாள். நான், ‘உனக்கு என்ன வியாதி இருக்கிறதென்று உனக்குத் தெரியுமா-?’ என்று கேட்டேன். அவள், ‘நான் சுகமாகி விடுவேன் என்று அவர்கள் நினைப்பதாக மருத்துவர் என்னிடம் கூறினார்’ என்றாள். ‘நல்லது,’ நான், ‘நீ குணமடையவில்லை என்றால் என்னவாகும்-? நீ ஒரு கிறிஸ்தவளா-?’ என்றேன். அவள், ‘இல்லை ஐயா, நான் கிறிஸ்தவளில்லை’ என்றாள். நான், ‘நீ ஒரு கிறிஸ்தவளாக விரும்புகிறாயா-?’ என்று கேட்டேன். அவள், ‘நான் கிறிஸ்தவளாக விரும்புகிறேன்’ என்றாள். மேலும் நான், ‘நீ கிறிஸ்துவுக்கு உன்னுடைய இருதயத்தைக் கொடுப்பாயா-?’ என்றேன். 130. அவள் கிறிஸ்தவளாக விரும்புவதாக கூறினாள். அவளுடைய தாயாரும் மேலே ஓடி வந்து, அவளும் கிறிஸ்தவளாக விரும்புவதாகக் கூறினாள். அவர்கள் இருவருக்கும் இங்கேயுள்ள குளத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, அந்த வாலிப பெண்ணுக்காக ஜெபத்தை ஏறெடுத்தேன். காலம் கடந்தது, இறுதியாக ஒரு சில நாட்களுக்குப் பிறகு, அந்த சிறு பெண் சுகமடையத் தொடங்கினாள். என்ன கோளாறு என்றே அவளுக்குத் தெரியாதிருந்தது. சிறிது கழிந்து, அவர்கள் அவளை பரிசோதிப்பதற்காக திரும்ப அழைத்துச் சென்றனர், வியாதியின் ஒரு சுவட்டைக் கூட அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. 131. அங்கே ஒரு... ஜனங்களுக்கு இருக்கிற கட்டிகள் போன்ற காரியங்களைக் குறித்துப் பேச எனக்கு விருப்பமில்லை, ஆனால் நான் ஜனங்களைக் குறித்து உத்தமமாக இருக்க விரும்புகிறேன். இந்தப் பட்டணத்தில் நான் நன்கு அறிந்த ஒரு மனிதர் இருக்கிறார், அவர் ஒரு அருமையான கிறிஸ்தவ சகோதரன், இல்லாவிட்டால் அவர் இச்சபையினுடைய டீக்கனாய் இருக்க மாட்டார்; அவர் சபையின் தருமகர்த்தாவாக இருக்கிறார் என்று கருதுகிறேன். மேலும் அவர் இப்பொழுது இங்கேயிருக்கிறார். அந்த சிறு பெண்ணைக் குறித்த காரியத்தைப் பதிவு செய்வதற்காக அவர் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். 132. வருடங்கள் கழிந்தன (இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குப் பிறகு), அந்த வாலிப பெண் தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்து, ஒரு பையனுடன் போய்க் கொண்டிருந்தாள். ஒரு நாள் அவளை நான் தெருவில் சந்தித்தேன், அவள் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டாள், அது என்னவென்று அவர்கள் அவளிடம் கூறின பிறகு, இயேசு கிறிஸ்துவின் வல்லமையின் மகிமைக்காக சாட்சி கூறினாளாம். 133. அந்தப் பெண்ணுக்கு விவாகமாகியது. அவளுக்குக் குழந்தைகள் பிறந்தார்கள், அவள் மகிழ்ச்சியாக ஜீவனம் பண்ணிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய தகப்பனார் இந்த மனிதருடைய வியாபார ஸ்தலத்திற்கு தம்முடைய முடியை வெட்டிக் கொள்வதற்காக வருகிறார். இங்கிருக்கும் திரு. ஈகன் அவர்கள் அந்த குடும்பத்தோடு முழு நேரமும் தொடர்ந்து இருந்து வருகிறார்... அந்த சிறு பெண் ஆரோக்கியமாகவும் சுகமாகவும் இருந்து வருகிறாள் (சகோ. ஈகன் அவர்களே, எவ்வளவு காலம் இருக்கும்-?), அநேக வருடங்களுக்கு முன்பு, இல்லையா-? தேவன் ஹாட்ஜ்கின் வியாதியை சுகப்படுத்துகிறார் என்பதற்கு ஒரு சாட்சியாக அவள் இன்றும் ஜீவித்துக் கொண்டிருக்கிறாள். 134. ஓ, இடுக்கண் மிகுந்த இம்மணி வேளைகளில், நமக்கு ஓர் அடைக்கலம் இருப்பதை அறிந்து கொள்வதென்பது மிகவும் நன்றாக உள்ளது. அந்த அடைக்கலம் கிறிஸ்துவே. கூட்டத்தில் சற்று முன்பு சம்பவித்த ஏதோ கொஞ்சமான காரியங்களை உங்களில் மற்றவர்களிடம் கூற விரும்புகிறேன். 135. நான் இப்பொழுது தான் - சில வாரங்களுக்கு முன்பு, இரண்டு வாரங்களுக்கு முன்பு, கூட்டங்களுக்காக மேற்கிற்குச் சென்றிருந்தேன், அப்போது உங்கள் எல்லாருடைய ஜெபங்களுக்கும் பதிலளிப்பதில் கர்த்தர் மிகவும் நல்லவராக இருந்தார். நாங்கள் டுல்சாவில் நடந்த கன்வென்சன் கூட்டத்தில் இருந்த போது, நான் பேசப் போவதாக இல்லாத நிலையில் இருந்தேன், ஏனெனில் நான் அங்கே ஒரு கூட்டத்தைக் கொண்டிருக்க வேண்டியதாய் இருந்தது, ஆனால் அது - நடந்து கொண்டிருந்த மற்ற எழுப்புதல் கூட்டங்களை ஊழியக் காரர்கள் கொண்டிருந்தனர், ஆகையால் அந்நேரத்தில் நான் கூட்டத்தைக் கொண்டிருக்க முடியவில்லை. 136. ஆனால் நான் சகோதரன் ஆர்கன் பிரைட்டை அழைத்து வருவதற்காக மனைவியும் நானும், சிறு ஜோசப்பும் கலிபோர்னியாவுக்குக் கடந்து சென்றோம். அந்த இரவில் நாங்கள் காலதாமதமாக வந்த போது, ஓரல் ராபர்ட்ஸ்-ம், டாமி ஆஸ்பார்னும் அந்த இரவில் பிரசங்கிக்கப் போவதாக இருந்ததை நான் அறிந்து கொண்டேன். ஆகையால், சகோதரன் ஆர்கன் பிரைட் அவர்கள் நாங்கள் எங்கே தங்கியிருந்தோம் என்பதை கண்டுபிடிக்கும் வரை ஓட்டல்களை போனில் அழைத்துக் கொண்டிருந்தார், (எங்களைக் கண்டுபிடித்து) ‘கூட்டத்திற்கு வாருங்கள்’ என்று அழைத்தார். எனவே அவர் வந்தார், அவரும் கிறிஸ்தவ வியாபார புருஷர்களைச் சேர்ந்த சகோதரன் சோன்மோரும் (அவர் மினியாபோலிஸில் உள்ள கிறிஸ்தவ வியாபார புருஷர்களின் சங்கத்தின் தலைவராக இருந்தார்) வந்தனர். அவர்கள் – அவர்கள் நான் போகும்படியாக என்னை அழைக்க வந்தனர், நான் உள்ளே போனேன், அவர்கள் ஏற்கனவே மேயோ பால்ரூமில் (Mayo Ballroom) உணவு சாப்பிட்டனர்; அது கோடீஸ்வரர்கள் இருக்கும் ஒரு மகத்தான இடமாகும். 137. எனவே, நான் அம்மாதிரியான ஒரு இடத்திற்குள் போகும் படியாக நான் எவ்விதம் உணர்ந்திருப்பேன் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் மேஜையின் மேல் வைத்திருந்த கத்திகளையும் முள்கத்திகளையும் உபயோகிக்கக் கூட எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் உள்ளே சென்றேன், நான் உள்ளே சென்ற போது, ஓரல் ராபர்ட்ஸ் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தார். அவர் சம்பூரண ஜீவன், பரிபூரணம் என்பதன் பேரில் பிரசங்கித்துக் கொண்டும், இயேசு மீன்களைப் பிடித்து, வலைகளில் அவைகளை வைத்தார் என்றும், அவர்களால் – அவர்களால் உபயோகிக்க முடிந்ததைக் காட்டிலும் அதிகமாக அவர்கள் கொண்டிருந்தனர் என்றும் கூறிக் கொண்டிருந்தார். 138. நீங்கள் அறிந்துள்ளபடி சகோதரன் ராபர்ட்ஸ் அவர்கள் ஒரு வல்லமை வாய்ந்த பேச்சாளர் ஆவார். அவர், ‘எல்லாருக்கும் அங்கே ஏராளமாய் உள்ளது. இப்பொழுது, நான் இங்கே ஒரு – ஒரு ஆலயத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்’ என்றார். (அநேகமாக இலட்சக்கணக்காக டாலர்கள் செலவானது). அவர் தொடர்ந்து, ‘அது வெள்ளை பளிங்குக் கற்களினால் கட்டப் பட்டுள்ளது. அதை ஏறக்குறைய பாதி அளவில் கட்டி விட்டேன். நான் பணத்திற்கு ஓடிக் கொண்டிருக்கிறேன். அதன் பிறகு ஒரு நாள் அதைக் காணும்படியாக வீதியில் சென்றேன், பிசாசு, ‘என்னவென்று உனக்குத் தெரியுமா-? ஜனங்கள் கடந்து சென்று ஓரல் ராபர்ட்ஸ் செய்ததைக் குறித்துப் பேசுகிறார்கள்’ என்றான்’ என்றார். 139. அவர், ‘அப்போது நான் பிசாசிடம், ‘ஆனால் ஓரல் ராபர்ட்ஸ் அதைச் செய்து முடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்று அவர்கள் கூற வேண்டும்’ என்றேன்’ என்றார். அது நல்லது. மேலும் அவர், ‘அது இங்கே இப்பட்டணத்தில் வங்கியில் வேலை பார்க்கும் ஒருவரின் இருதயத்தின் முன்னால் வைக்கப்பட்டது, அதன் காரணமாக அக்கட்டிடத்தைக் கட்டி முடிப்பதற்காக ஒரு வங்கியிலிருந்து கிட்டத்தட்ட 2 மில்லியன் டாலர்கள் கடனாகப் பெற்றேன்’ என்றார். 140. வங்கிகள் அவ்வாறு செய்வதில்லை என்று உங்களுக்குத் தெரியும். மேலும் அவர், ‘அந்த குறிப்பிட்ட வியாபாரியான வங்கியாளர் இப்பொழுது இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். நான் அவருடைய பெயரை அழைக்க விரும்பவில்லை, ஏனெனில் அவர் சரியாக முழு சுவிசேஷ ஜனங்களைச் சேர்ந்தவரல்ல’ என்றார். ஆனால் ‘அவர் இங்கேயிருக்கிறார்’ என்றார். ‘அவர் ஒரு கிறிஸ்தவர் என்று கூட உரிமை கோருவார் என்று நான் – நான் நினைக்கவில்லை’ என்றார். ஆனால், ‘ஏதோவொன்று அவருடைய இருதயத்தை அசைத்து, நான் பணத்தைப் பெறும்படி செய்தார். அவர் எழுந்து நிற்க விரும்பினால், அவரால் கூடும், ஆனால் நான் அம்மனிதரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தப் போவதில்லை’ என்றார். அந்த மனிதன் எழுந்து நின்று, ‘திரு.ராபர்ட்ஸ் அவர்களே, நான் தர்ம சங்கடத்தில் ஆழ்ந்து விடவில்லை’ என்று கூறிவிட்டு உட்கார்ந்து விட்டார். 141. பிறகு நான் உள்ளே சென்று உட்கார்ந்து கொண்டேன். அதன் பிறகு ஓரல் ராபர்ட்ஸ் அவர்கள் அங்கு அடைந்த உடனே, அவர் வந்து என்னோடு கரங்களைக் குலுக்கி, தம்முடைய கரங்களால் என்னை மேலே இழுத்துக் கொண்டார். ஒரு சில நிமிடங்கள் கழித்து, நாங்கள் இன்னும் சாப்பிட்டுக் கொண்டு, கூட்டங்களுக்காகவும் இன்னும் மற்றவைகளுக்காகவும், ஊழியக்காரர்களுக்காகவும் தேடிக் கொண்டிருக்கையில், நிச்சயமாகவே அநேக ஜனங்கள் சூழ்ந்து வந்து பேசிக் கொண்டிருந்தனர், உங்களுக்குத் தெரியும். 142. பிறகு டீமாஸ் சகரியான் எழுந்தார். அவர் முழு சுவிசேஷ வியாபார புருஷர்களின் சங்கத்தின் தலைவராக இருந்தார். அவர் எழுந்து நின்று, ‘இன்றிரவு கடைசி செய்தியை சகோதரன் பிரன்ஹாம் நமக்காக பிரசங்கிக்க வேண்டுமென்று வழிநடத்தப்படுவதை நான் உணருகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். நல்லது, என்ன சொல்லுவதென்றே எனக்குத் தெரியவில்லை. இங்கே உட்கார்ந்திருக்கும் ஒரு மனிதரைப் பற்றி அவர் கூறத் தொடங்கினார். ‘இங்கே இன்னார் இன்னார் இருக்கிறார், நான் இன்றைக்கு அவரை சந்தித்தேன். மிறக்கிள் மைல்ஸ் (Miracle Miles) னுடைய இந்த மூன்று அல்லது நான்கு நகர வட்டாரங்கள் முழுவதையும் அவர்கள் சொந்தமாகக் கொண்டிருப்பதாக அவர்கள் என்னிடம் கூறிக் கொண்டிருந்தனர்’ என்றார். அவர்கள் கோடீஸ்வரர்களாகவும், கால்நடைப்பண்ணையின் முதலாளிகளாகவும், இன்னும் மற்றவர்களாகவும் இருந்தனர். அவ்விதமான ஒரு கூட்டத்தில் இருந்ததைக் குறித்து நான் என்ன கூற முடியும். 143. ஆனால் எப்போதுமே கீழ்படிவது தான் சிறந்தது என்று உங்களுக்குத் தெரியும். ஆகையால் என்னால் கூடுமானவரையில் சிறப்பாக பேசும்படி நான் எழுந்தேன், மேலும் ஆராதனையின் முடிவில்... அவ்விதமான ஒரு இடத்தில் பீட அழைப்பைக் கொடுப்பதென்பது முற்றிலும் வழக்கத்துக்கு மாறானதாகும். ஆனால் அடக்க ஆராதனைகளிலும் நான் பீட அழைப்பைக் கொடுத்திருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகையால், இதோ ஒரு நல்ல வாய்ப்பு என்று எண்ணி, நான் - நான் பீட அழைப்பை விடுத்தேன். அப்போது அந்த பணக்கார மனிதர்கள் பெண்கள் எல்லாரும் கர்த்தராகிய இயேசுவிடம் வந்து தங்கள் இருதயங்களைக் கர்த்தருக்குக் கொடுத்தனர். 144. நான் ஒரு கோடீசுவரரைக் குறித்து ஆச்சரியப்பட்டேன், சுற்றிலும் ஓரங்களில் அழகான இறகுகள் கொண்ட ஒரு சிறு தொப்பியை அணிந்திருந்த கோடீசுவரரின் மனைவி அங்கு இருந்தாள், அது அநேகமாக 100 டாலர்கள் பெறுமானமுள்ளதாய் இருந்திருக்கும். அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது, அவள் கரத்தால் என்னைப் பற்றிப்பிடித்து, ‘சகோதரன் பிரன்ஹாமே, என்னுடைய இருதயம் அசைக்கப்பட்டது. நான் இப்பொழுது வரை ஒரு கிறிஸ்தவள் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். நான் கர்த்தரை சேவிக்க வாஞ்சிக்கிறேன்’ என்றாள். நான், ‘உனக்கு நன்றி’ என்றேன். 145. அதன்பிறகு ஒரு சில நிமிடங்களில் ஏதோவொன்று என்னிடம், ‘இப்பொழுது வியாதியஸ்தருக்காக ஜெபி’ என்றது. நான், ‘ஓ, இல்லை. என்னால் அதைச் செய்ய முடியாது. நான் ஏற்கனவே இந்த பெரிய நடனமாடுவதற்கான வழுவழுவப்பான அறையால் (ballroom) தடை செய்யப்பட்டிருக்கிறேன். எனவே, நான் – நான் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பேனென்றால், நான் உண்மையிலேயே ஒரு மூடபக்தி வைராக்கியம் உடையவன் என்று எண்ணுவார்களே’ என்று நினைத்தேன். 146. எனவே நான், ‘நிச்சயமாகவே கர்த்தர் அதை என்னிடம் சொல்லியிருக்க மாட்டார்; ஒருக்கால் இந்த மனமாற்றங்களின் காரணமாக நான் முழுவதுமாக உணர்ச்சி வசப்பட்டு இருக்கலாம். ஆகையால் நான் நழுவிச் சென்று உட்கார்ந்து கொள்வேன்’ என்று எண்ணினேன். நான் பேச்சாளரின் மேஜை பக்கமாக கீழே சென்று, கடைசி இடத்திற்கு சென்று, அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த சகோதரன் ஜாக் மூரோடு உட்கார்ந்து கொண்டேன். நான் தலைவராகிய திரு. ஷகரியான் அவர்களிடம் ஆராதனையை திரும்ப ஒப்படைத்தேன். அப்பொழுது அவர் – அவர் எழுந்து, ‘என்னவென்று உங்களுக்குத் தெரியுமா-?’ என்று கேட்டார். ஓ, தேவன் அவருடைய தோளின் மேல் தொட்டிருக்க வேண்டும். அவர், ‘சகோதரன் பிரன்ஹாம் திரும்ப வந்து சுகவீனமுள்ளவர்களுகாக ஜெபிக்க வேண்டுமென்று தான் வழிநடத்தப் படுவதாக உணருகிறேன்’ என்றார். நான், ‘ஓ’ என்று நினைத்தேன். அது முற்றிலும் சரியானது. 147. நான் எழுந்து அவர்களிடம் கூறினேன், நான், ‘நானும் அதை உணர்ந்தேன், தேவன் என்னை மன்னிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், ஆனால் யாரோ ஒருவர் தொடுதலைப் பெறும் போது, அதுவும் கூட மேலானதாக உள்ளது, உங்களுக்குத் தெரியும், அது ஆவியானவரின் கிரியை என்று நாம் முழுவதுமாக அறியும்படி செய்கிறது’ என்றேன். 148. எனவே நான், ‘இப்பொழுது, தெய்வீக சுகமளித்தலானது குலமரபுச் சின்னம் செதுக்கப் பட்டுள்ள கம்பத்தைத் தொடுவதல்ல. அது வெறும் கற்பனையான ஏதோவொன்றல்ல. அது சிறிது முன்பு இங்கேயிருந்த இந்த ஜனங்கள் எல்லாரையும் இரட்சித்த அதே தேவனாகும். அவரை விசுவாசிக்கிற எளிமையான விசுவாசத்தின் மூலமாக இங்கிருக்கிற இந்த ஜனங்கள் எல்லாரையும் சுகப்படுத்துகிற அதே தேவன் அவரே. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-?’ என்றேன். 149. இப்பொழுது இது என்னுடைய சபைக்குக் கூறப்படும் இரகசியமாகும்... நீங்கள் அறிந்து உள்ளபடி, என்னுடைய ஊழியமானது மாறிக் கொண்டிருக்கிறது. ஓ, என்னவொரு மகிமையாக மாற்றம். ஒலிக்கப்பட்ட வார்த்தைகளை நீங்கள் எல்லாரும் நினைவுகூருகிறீர்கள்; அது ஒவ்வொரு தடவையும் சம்பவிக்கும் போதும், ஏதோவொன்று சம்பவிக்கிறது. நான் அதன் பேரில் பேசப்போவதாக இருந்தபோது, ‘இந்த மலையைப் பார்த்துப் பேசு’ என்பது என்னிடம் வந்தது, வந்தது. அது ஏன் அவ்விதமாக இருந்து வந்தது-? அது விசுவாசமாக இருந்து வந்துள்ளது. எதுவாக இருந்தாலும் அது விசுவாசத்தின் மூலமே. விசுவாசம் என்பது உங்கள் சொந்த முயற்சியினால் உண்டாக்கிக் கொள்ளுகிற ஏதோவொன்றல்ல. விசுவாசம் என்பது நீங்கள் கொண்டிருக்கிற ஏதோவொன்றாக இருக்கிறது. 150. மேலும் நான் நினைத்தேன்... நான் எப்போதுமே என்னுடைய விசுவாசத்தைக் குறித்து வெட்கப்படுவதுண்டு, ஆனால் ஜனங்களோ, கர்த்தர் எவ்வளவு நல்லவரோ அவ்வளவு நல்லவராக அவர் காரியங்களை காண்பித்து, தரிசங்களைக் கூறி வந்திருக்கிறார்; யாவுமே பரிபூரணமாக இருந்து வந்துள்ளது. ஜனங்களாகிய உங்களுக்கு அது தெரியும். அது ஒரு தனிப்பட்ட நபரல்ல. அது ஒரு மனிதனல்ல. அது அதைச் செய்கிற தேவனாகும். இங்கிருக்கிற இந்த புகைப்படம், அது எப்படியாக உலகத்தைச் சுற்றிலும் சென்றது. அவைகளில் ஒன்று ஜெர்மனியில் எடுக்கப்பட்டது... இங்கே ஒரு சில வாரங்களுக்கு முன்பு (அதை ஒருபோதும் கண்டிராத அந்நியர் ஒருவேளை இங்கேயிருக்கலாம்), அவர்கள் வேறொரு படத்தை எடுத்தனர். நான் அதை என்னுடைய வீட்டில் வைத்திருக்கிறேன். அது சரியாக நான் நின்று கொண்டிருந்த இடத்திற்கு பின்பாக நிற்கிற கர்த்தராகிய இயேசுவினுடைய முகத்தின் பக்கத் தோற்றமாகும் (profile). நான், ‘இந்த மலையைப் பார்த்துப்: பெயர்ந்து போ என்று பேசி, உன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசி’ என்ற பாடத்தின் பேரில் பேசிக் கொண்டிருந்த போது, அவருடைய கரங்கள் வெளியே நீட்டப்பட்டு, அவருடைய கரங்களிலிருந்து அக்கினி நாவுகள் புறப்பட்டுச் சென்றன. 151. நாம் அதைப் பெற்றிருக்கிறோம். அது ஒருவகையான நிறங்களில் (Techni-Koda-Chrome colors) இருக்கிறது. நாங்கள் அதை இப்பொழுது வீட்டில் வைத்திருக்கிறோம். மேலும் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்... அது இப்பொழுது விஞ்ஞானத்தின் மூலமாகவும் மற்றவைகளின் மூலமாகவும் ஆய்வுக்கூடங்களில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அது வெகுவிரைவில் வெளியே வரும். வேறொன்று - இப்பொழுது வித்தியாசமான இடங்களில் எடுக்கப்பட்ட அவைகளில் ஏறக்குறைய ஆறு புகைப்படங்கள் பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவோ அவைகள் எல்லாவற்றிலும் முதன்மையானதாயுள்ளது. 152. ஒரு போதுமே கண்டிருக்கவில்லை... அங்கே அவருடைய - அவருடைய தாடியும், அவருடைய முகமும், அவருடைய முகத்தின் பக்கத் தோற்றமும் (profile), வெளியே நீட்டப்பட்ட அவருடைய கைகளும் (hanging out) காட்டப்பட்டுள்ளன. நான் இவ்விதமாக வலது பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன், அங்கே தான் அவருடைய கரங்களை வைத்திருந்தார், அதைப் போன்ற அவரின் ஒரு பாகத்தைக் கூட உங்களால் காண முடியவில்லை. என்னுடைய தலையும், பிறகு கீழே தரையில் என்னுடைய காலும் உள்ளன. வெறுமனே தலையும் காலும், அங்கே மீதியாக விடப்பட்டிருந்தவை அவ்வளவு தான். பாருங்கள்-? 153. அவர் - அவர் இவ்விதமாக தம்முடைய கரங்களை வைத்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தார், நானோ இவ்விதமாக என்னுடைய கரங்களை வெளியே வைத்துக் கொண்டு, ‘இந்த மலையைப் பார்த்துப் பேசு’ என்று கூறியபடியே பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். ஏறக்குறைய அந்த சமயத்தில், ஏதோவொன்று சம்பவித்தது, அவர்கள் இவ்விதமாக அதைப் புகைப்படம் எடுத்தனர். அங்கே அது பின்னால் இருந்தது. எல்லாமே வண்ணங்களில் இருந்தது. மேலும் ஒரு பெரிய... 154. இவ்விதமாக தேவன் அதை ஆயத்தம் பண்ணுகிறவிதமாகவே, ஒரு பெரிய கூடையில் வைக்கப்பட்டிருந்த சிறிய கொத்து கொத்தான ஒரு வகை லீலி மலர்கள் அருகில் இருந்தன. அவர் பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமாக இருக்கிறார். நீங்கள் ஓப்பியத்தை எங்கிருந்து பெற்றுக் கொள்ளுகிறீர்கள்-? லீலி மலர்களிலிருந்து தான் நீங்கள் ஓப்பியத்தைப் பெற்றுக் கொள்ளுகிறீர்கள். அது சரியே. ஓப்பியம் தேவன் எதைக் கொண்டிருக்கிறார்-? சமாதானத்தை. ஓப்பியம் உங்கள் பிரச்சனைகள் எல்லாவற்றையும் குறித்து நீங்கள் மறக்கும்படி செய்கிறது. ஓப்பியத்தைக் கொண்டு புகைபிடிப்பவர்கள்: அவ்வாறு தான் அந்த ஓப்பியத்தைக் கொண்டு அவர்கள் தங்களைத் தாங்களே கொன்று போடுகிறார்கள். தேவனிடமும் ஒரு ஓப்பியம் உள்ளது. ஆமென். அவர் ஒவ்வொரு வேதனையையும் நீக்கி, சகல வியாதிகளையும் சுகமாக்கி, ஒவ்வொரு கவலையையும் நீக்கிப் போடுகிறார். 155. நாம் அவருடைய ஓப்பியத்தை முகர்ந்து கொண்டிருக்கும் வரையில், நாம் சமாதானமாய் இருக்கிறோம். மேலும் நான் மேடையில் பேசிக் கொண்டிருந்த இடத்தின் முன்பக்கத்தில் ஒரு பெரிய கூடையில் லீலி மலர்கள் இருந்தன. 156. மேலும் நான் அங்கே டுல்சாவில் (Tulsa), வியாதியஸ்தர்களுக்காக ஜெபித்து விட்டு, அப்படியே கீழே நடந்து சென்று, வெளியே போய் விட்டேன். ஏறக்குறைய 10 நிமிடம் கழித்து, (அந்த சுவிசேஷகருடைய பெயரை நான் கூற விரும்பவில்லை), ஆனால் இந்த சுவிசேஷகருக் காக வேலை செய்யும் ஒரு பெண்மணிக்கு முதுகுத்தண்டில் கீல்வாதம் இருந்தது, (அவள் ஒரு சுருக்கெழுத்தாளராக இருந்தாள்), அவள் இவ்விதமாக அதை தட்டச்சு செய்ய வேண்டி இருந்தது, ஏனென்றால் அவளுடைய கைகளும் தோள்களும் பிணைந்திருந்தன. அவள் இவ்வாறு தட்டச்சு செய்தாள், டுல்சாவைச் சேர்ந்த இம்மகத்தான இந்த பிரபல சுவிசேஷகர் தம்முடைய வேலையை செய்யும்படியாக அவளுக்கு வேலை கொடுத்திருந்தார், அவள் அங்கே (வேலை பார்த்தாள்). அவள் கீழே முகப்புக் கூடத்தில் நடந்து செல்லத் தொடங்கினாள், திடீரென்று அவளுடைய கரங்கள் கட்டவிழ்க்கப்பட்டன, அங்கே மேலேயிருந்த யாவருடைய கவனத்தையும் ஈர்க்கும் அளவுக்கு அவள் துள்ளிக் குதித்து சத்தமிடத் தொடங்கினாள். 157. மேலும் அந்த அன்பான பெண்மணி தன்னுடைய முழங்கால்களில் விழுந்து தன்னுடைய கரங்களை உயர்த்தி, இவ்விதமாக கரங்களைத் தட்டினாள் – தேவனுக்கு மகிமை –ஏன் என்றால் ஜெபத்திற்குப் பிறகு கொஞ்ச நேரத்தில், தேவன் அவளை விடுதலையாக்கியிருந்தார். நான் நழுவிச் சென்று, அவள் என்ன கூறிக் கொண்டிருந்தாள் என்று கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள், ‘நான் இந்த முகப்புக்கூடத்தில் அப்படியே நடந்து கொண்டு இருந்தேன்’ என்றாள். 158. நான், ‘நல்லது, தேவனுக்கு நன்றி’ என்றேன். நான் சுற்றிலும் திரும்பி, வேறொரு வழியாக நடந்து செல்லத் துவங்கினேன், அப்போது நான் அங்கே கீழே சத்தத்தைக் கேட்டு, பாவிகள் யாவரும் ஒன்றாக ஓடிவந்து என்ன விஷயம் என்று பார்ப்பதைக் கண்டேன். 159. மேலும் இதோ ஒரு மனிதர் தரையில் எடுத்து வரப்பட்டார், அவர் தான் சகோதரன் கார்ட்னர், (இந்த சூட்டை எனக்குக் கொடுத்த அதே மனிதர்)... உங்களில் அநேகருக்கு சகோதரன் கார்ட்னரைத் தெரியும் - நியூயார்க்கிலுள்ள பிங்கம்டனைச் (Binghamton, New York) சேர்ந்த சகோதரன் கார்ட்னர், ஓல்ட்ஸ்மொபைல் கார்களை (Oldsmobile) விற்பனை செய்கிற முக்கியமானவர்; அவர் கடந்த மூன்று வருடங்களில், ஐக்கிய நாடுகளில் வேறெந்த மனிதரைக் காட்டிலும் அதிகமான ஓல்ட்ஸ்மொபைல் கார்களை விற்பனை செய்திருக்கிறார். 160. மேலும் அவர் தமக்கு சொந்தமான விமானத்தில் பயணம் செய்கிறார். சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, (அவருடைய பெயர் ஜார்ஜ் கார்ட்னர்), அவர் - அவருடைய விமான ஓட்டி, அவர் தாமாகவே தனியாக அந்த விமானத்தை ஓட்டிச் சென்றார், அப்போது விமானம் விழுந்து, அவருடைய முழங்கால்களும், அவருடைய கணுக்கால்களும் நொறுங்கிப் போனது. அவருடைய கால் பகுதிகளும், கால்களும் வளையாமல் விறைப்பானதாய் ஆகி விட்டன, அவர் இவ்விதமாக நடந்தார்: அவருடைய விமான ஓட்டி. 161. ஜெபம் செய்யப்பட்ட போது, அவரும் அங்கிருந்தார். அவர் தாமாகவே முகப்பு கூடத்தை விட்டு, விருந்து நடந்த இடத்திற்கு போயிருந்தார். அவர்கள் அவரை அருகிலிருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றனர், எனவே தான் முன்னும் பின்னும் நடப்பதில் அவருக்கு சிரமம் இருக்காது. 162. இதோ அவருடைய சாட்சி: அவர் தமது அறைக்குச் சென்று உட்கார்ந்தார், அவர் ஒரு கிறிஸ்தவனாக கூட இருக்கவில்லை. மேலும் அவர், ‘எவ்வாறாயினும் அல்லது இன்றிரவு அங்கே மேலே பிரசங்கம் பண்ணின வழுக்கை தலைகாரர் வேறொருவர் என்று நம்புகிறேன்’ என்றார். மேலும் அவருடைய கால்கள் அசையத் தொடங்கினதை அவர் கவனிக்க ஆரம்பித்ததாகவும், அவர் தம்முடைய கால்களினால் துள்ளிக் குதித்ததாகவும் கூறினார், ஒவ்வொரு சிறு பாகமும் சுகமடைந்தது, அவர் தேவனை மகிமைப்படுத்தியவாறு நின்று கொண்டிருந்தார். அவர் நின்று கொண்டே, தம்முடைய கால்களை இவ்விதமாக மேலும் கீழும் உயர்த்தி, தம்முடைய கால்பகுதிகளையும் மற்ற யாவற்றையும் உயர்த்திக் காட்டி, தேவனுடைய மகிமைக்காக சாட்சிகூறிக் கொண்டிருந்தார். 163. நாம் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பதற்கு முன்பு, மீண்டும் ஒருமுறை: நான் சகோதரன் ஆர்கன்பிரைட்டோடு தங்கியிருந்தேன். (அவை யாருடைய தொலைபேசி அழைப்புகள் என்று என்னுடைய நல்ல நண்பர் லியோ ஜீனுக்கு தெரியும்.) தொலைபேசி மணி ஒலித்துக் கொண்டு இருந்தது, சகோதரன் ஆர்கன் பிரைட் தான் எடுத்துப் பேசுவார், நீங்கள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பது உங்களுக்கு - உங்களுக்குத் தெரியும். ஆனால் நான் அந்த தொலைபேசியை எடுத்துப் பேசும்படி நேரிட்டது. எல்லா காரியங்களுமே தேவனுடைய தெய்வச் செயலின்படியாக நடக்கிறது என்று நான் நம்புகிறேன், நீங்கள் அதை நம்பவில்லையா-? அதன் காரணமாகத்தான் இந்த வாலிப பெண்மணி இங்கே இருக்கிறாள் என்று நம்புகிறேன். அதன் காரணமாகத்தான் நீங்கள் எல்லாரும் இங்கேயிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். அதனால் தான் நான் இங்கேயிருக்கிறேன் என்று நம்புகிறேன். நாம் ஏதோவொரு காரணத்திற்காகவே தேவனுடைய மகிமைக்காக ஒன்றாக சந்திக்கிறோம். நாம் இந்தக் காலை வேளையில் இங்கே இந்த பனிப்பிரதேசத்தில் ஏன் வர வேண்டும்-? 164. எனவே, சகோதரன் ஆர்கன்பிரைட் அறையில் இல்லாத காரணத்தினால் நான் தொலைபேசியை எடுத்துப் பேசினேன். அவர், ‘நான் சகோதரன் பிரன்ஹாமிடம் பேச விரும்புகிறேன்’ என்றார். நான், ‘நான் தான் சகோதரன் பிரன்ஹாம்’ என்றேன். 165. அவர் ஸ்பெயின் தேசத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாயிருந்தார் (Spanish man). அவர், ‘ஐயா, நான் கேட்கப்போகிற கேள்வியானது பெரும்பாலும் நான் கேட்பதற்கு பொருத்தமற்ற ஒரு கேள்வி என்பது எனக்குத் தெரியும். ஜனங்கள் எவ்வாறு கவர்ந்து இழுக்கப்படுகிறார்கள் என்றும் மற்ற காரியங்களைச் செய்கிறார்கள் என்றும் என்னால் கற்பனை செய்ய முடிகிறது’ என்றார். ஆனால், ‘நான் மெக்சிகோவில் ஒரு மிஷனரியாக இருக்கிறேன்’ என்றார். மேலும் அவர் தொடர்ந்து, ‘நான் இங்கே திரும்பி வந்தேன்... நான் இங்கே லா கிறசென்ட்டாவில் (La Crescenta) வசிக்கிறேன், மேலும் நீங்கள் பட்டணத்தில் இருந்தீர்கள் என்று ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் அறிந்தேன். நான் என்னுடைய குழந்தையை வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் உம்மிடமோ அல்லது சகோதரன் ராபர்ட்ஸிடமோ அல்லது ஏதாவது ஒரு சகோதரரிடமோ திரும்ப அழைத்து வர முயற்சி செய்தேன். அது என்னுடைய குழந்தை, என்னுடைய விசுவாசமோ கொஞ்சம் பலவீனமுடையதாயிருக்கிறது என்று ஊகிக்கிறேன். என்னுடைய குழந்தை பிறந்து இன்னும் 4 மாதங்கள் ஆகவில்லை, அதுவோ புற்று நோயினால் மரித்துக் கொண்டிருக்கிறது’ என்றார். ஏதோவொன்று என்னிடம், ‘அந்தக் குழந்தையிடம் செல்’ என்றது. நான், ‘ஐயா, நான் சகோதரன் ஆர்கன் பிரைட்டை அழைத்து வருகிறேன், அந்த குழந்தை எங்கே இருக்கிறது என்று அவரிடம் கூறுங்கள். நான் உங்களை சந்திக்கிறேன்’ என்றேன். 166. எனவே அவர்... நான் சகோதரன் ஆர்கன்பிரைட்டை அழைத்து வந்தேன், அவர் அவரிடம் குழந்தை எங்கேயிருக்கிறது என்று கூறினார். எனவே நாங்கள் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றோம். நான் அவருடைய சிறு மனைவியை சந்தித்தேன். அவர் பார்க்க தோற்றத்தில் மெக்ஸிகனாயில்லாத போதிலும், அவர் மெக்ஸிகனாகத் தான் இருந்தார், அவர் அழகான வெள்ளை நிறத்தினராயிருந்தார். ஆனால் அவர் ஒரு மெக்ஸிகனாயிருந்தார், அநேக நேரங்களில் மெக்ஸிகனைச் சேர்ந்தவர்கள் இளம் பொன்னிறமான தலைமயிரை உடையவர்களாக இருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் ஸ்பெயின் தேசத்தவருக்கும், இந்தியருக்கும் இடைப்பட்ட வகையினராயிருக்கிறார்கள். அங்கே உள்ள அந்த இந்தியர்களில் சிலரும் சற்றே இளம்பொன்னிற தலைமயிர் உடையவர்களாயிருக்கிறார்கள், பனி வெண்மை நிறம். 167. மேலும் அப்போது... அவருடைய மனைவியோ ஃபின்லாந்து தேசத்தினளாயிருந்தாள், அவளுக்கு சரியாக இளம் பொன்னிற தலைமயிர் இருந்தது, அவள் மிகவும் இனிமையான சிறு பெண்மணியாக இருந்தாள். நான் அவருடைய குழந்தையைப் பார்ப்பதற்காக அவரோடு மருத்துவமனைக்கு சென்றேன். நான் அறைக்குள் நடந்து சென்ற போது, அவர்கள் அதை சரியாக தாதிகள் இருக்கும் பிரதான ஸ்தலத்திற்கு அடுத்ததாக வைத்திருந்தனர். அந்த சிறு குழந்தைக்கு 4 வயதே ஆகியிருந்த போதிலும், அதனுடைய தாடைகளில் கொடிய கட்டிகளோடு பிறந்திருந்தது, அது இவ்விதமாக ஏறக்குறைய அதனுடைய முகத்திலிருந்து இது வரைக்குமாக வீங்கியிருந்தது, இவ்விதமாக வெளிப்புறம் வரை அப்படியிருந்தது. 168. மருத்துவர்கள் அதை அறுவை சிகிச்சை செய்வதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தனர், அந்த குழந்தையின் சிறிய தொண்டையைச் சுற்றிலும் முழுவதுமாக வெட்டப்பட்டதினால் ஆழமான வடுக்கள் இருந்தன, அது எல்லாவிதத்திலும் முழுவதுமாக சுற்றி வெட்டப்பட்டு இருந்தன. அதுவோ நிற்கவில்லை. அது அதனுடைய நாக்கிற்குள் மட்டுமே அதிகமாக இருந்தன. அந்த சிறு தாடைகள் இவ்விதமாக பெருத்து, ஆழமான வடுக்களோடு தொங்கிக் கொண்டிருந்தன. அதனுடைய சிறு நாவும், சிறு வாயும் அதைக் காட்டிலும் பெரியதாக இருக்கவில்லை. அதனுடைய நாவு அநேகமாக பெரிதாக வீங்கியிருந்தது, அது ஏறக்குறைய இதுவரைக்குமாக வெளியே தள்ளிக் கொண்டிருந்தது, மேலும் அது கறுப்பு நிறமாக மாறியிருந்தது, அதனுடைய வாயின் மேற்பகுதியில் அது வீங்கியிருப்பதால், மூக்கிலிருந்து வெளியேறும் சுவாசத்தை அடைத்திருந்தது. அது நிச்சயமாக அதனுடைய சுவாசத்தை இங்கிருந்து அடைத்திருந்தது. அவர்கள் அதனுடைய தொண்டையில் ஒரு துவாரத்தை வெட்டி எடுக்க வேண்டியிருந்தது, அந்தக் குழந்தையினுடைய தொண்டையில் ஒரு சிறு வட்டமான தகரத்தால் செய்யப்பட்ட மூடியைப் போன்று, அது கொஞ்சம் விசில் அடித்துக் கொண்டிருந்தது. 169. அந்த குழந்தையின் சிறு கைகள் இவ்விதமாக உலோகத் தகடு கொண்டு கட்டப்பட்டு இருந்தது, அப்போது தான் அந்த விசிலை வெளியே இழுக்கும்படியாக அதை அடைய முடியாது. அது முச்சு திணறிக் கொண்டிருந்தது. அந்த புற்று நோயானது சீழ் வடிந்து கொண்டிருந்தது... அந்த விசிலிலிருந்து வரும் புற்று நோயினுடைய சீழை எடுப்பதற்காக தாதி அங்கே ஏதோவொன்றோடு அங்கே நிற்க வேண்டியிருந்தது அல்லது அது மூச்சு திணறி மரித்து விடும். 170. அந்தத் தகப்பனார் படுக்கையைச் சுற்றிலும் நடந்து, ‘ரிக்கி, அப்பாவின் சிறு மகனே. ரிக்கி, உனக்காக ஜெபிப்பதற்காக சகோதரன் பிரன்ஹாமை அப்பா அழைத்து வந்திருக்கிறேன்’ என்றார். அவர், ‘அப்பாவின் சிறு மகனே’ என்று கூறினபோது, என்னுடைய ஆவி என்னை விட்டு அப்படியே போய் விட்டது. அதற்கு மேலும் என்னால் அப்படியே நிற்க முடியவில்லை. நான் அப்படியே படுக்கையின் பக்கத்தில் தொடர்ந்து நின்றிருக்க வேண்டியிருந்தது. ‘அப்பாவின் சிறு மகனே.’ 171. அந்த சிறு குழந்தை அந்த சிறு பருவமாயிருந்த போதிலும், அது தன்னுடைய அப்பாவை அறிந்திருந்தது. அது அதனுடைய சிறு கரங்களை இவ்விதமாக வைத்தவாறு, இவ்விதமாக முச்சுத் திணறத் துவங்கியது; அவர் அந்த சிறு குழந்தையின் தலையின் மேல் அன்பாகத் தட்டிக் கொடுக்க முயற்சித்தார். அந்த பரிதாபமான சிறு குழந்தையானது அந்த நிலைமையில் பிறந்திருந்தது... 172. அதனால் சிறிதும் பேச முடியவில்லை. நான் அப்படியே... நீங்கள் மிகவும் உணர்ச்சி பெருக்கோடு இருக்கும் போது, உங்களால் எதையும் பேச முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். நான் கீழே நோக்கி, கட்டப்பட்டிருந்த அந்தப் பெரிய கட்டையின் (splints) கீழிருந்து வெளியே வந்து, மூச்சு திணறும் சத்தத்தை உண்டாக்குகிற அந்த சிறு பிஞ்சு கரங்களை கண்டு, ‘இது பரிதாபமுள்ளதாய் இல்லையா-?’ என்று எண்ணினேன். 173. நான் வேறு ஏதோவொன்றை சிந்திப்பதற்கு, அந்த விதமான சிந்தனையிலிருந்து என்னை நானே போதுமான அளவுக்கு ஒருவிதமாக விடுவித்துக் கொண்ட பிறகு, ‘இயேசுவே, இதைப் பார்த்துக் கொண்டிருப்பது உமக்கு சந்தோஷமாய் உள்ளதென்று நீர் கூறுகிறீரா-? என்னால் அதை விசுவாசிக்க முடியவில்லை. இந்த சிறு குழந்தையின் இவ்விதமான உபத்திரவத்தில் இருந்து நீர் மகிமையைப் பெற்றுக் கொள்கிறீர் என்று என்னால் சற்றும் விசுவாசிக்க முடியவில்லை. அது அப்படியாக இருக்க முடியாது. அந்தக் குழந்தையின் நிமித்தமாக பாவியாகிய நானே இவ்விதமாய் உணரும்படி அது செய்யுமானால், உமக்கு அது எப்படி இருக்கும்-? சகல இரக்கத்தின் உறைவிடமாகிய உமக்கு அது என்னவாக இருக்க வேண்டும்-?’ என்று எண்ணினேன். அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை; அதை அமைதிபடுத்தும்படி, அவர் அதனோடு விளையாட முயற்சித்துக் கொண்டிருந்த போதிலும். குழந்தைகளுக்குரிய அணையாடையை அணிந்து கொண்டிருந்த அதனுடைய சிறு சரீரமானது, அப்படியே ஏறக்குறைய - அந்த சிறு சரீரம் எல்லாமும் (அதனுடைய தலையைக் காட்டிலும்) பெரியதாக இருக்கவில்லை, அதனுடைய தலையே மிகப் பெரிய பாகமாக இருந்தது. அதனுடைய தாடைகள் மிகப் பெரிதாக வீங்கியபடி இருந்தன. 174. உட்புற அழுத்தத்தினால் திடீரென்று திறக்கப்படாமல் அதனுடைய சிறு தலையை காப்பதற்காக அவர்கள் அதனுடைய தலையைச் சுற்றிலும் ஏதோவொன்றை வைத்திருந்தனர், உங்களுக்குத் தெரியும், அது ஒரு கந்தல் துணியாக இருந்தது. அது வெடித்து திறப்பதிலிருந்து காக்கும் பொருட்டு வைக்கப்பட்டிருந்தது, அதனுடைய தாடைகள் இவ்விதமாக வெளிப் புறத்தில் மிகப்பெரிய அளவில் வீங்கியிருந்தது. 175. தாதி அங்கே நின்று கொண்டிருந்தாள். நான் அந்த சிறு குழந்தையை ஏறிட்டுப் பார்த்து, ‘கர்த்தாவே, நீர் இங்கே நின்று கொண்டிருந்தால், என்ன செய்திருப்பீர்-?’ என்று நினைத்தேன். இப்பொழுது, நான் பிரசங்க பீடத்தில் இருக்கிறேன் என்றும் தேவன் இங்கே பிரசன்னமாய் இருக்கிறார் என்பதையும் நான் உணருகிறேன். ஆனால் என்னுடைய ஆத்துமாவில் ஏதோவொன்று என்னிடம் பேசினது போல் எனக்குத் தோன்றியது, ‘நீ அதைக் குறித்து என்ன செய்யப் போகிறாய் என்பதைக் காண நான் காத்துக் கொண்டிருக்கிறேன். நான் சபைக்கு என்னுடைய அதிகாரத்தைக் கொடுத்துள்ளேன். ‘இந்த மலையைப் பார்த்து பேசு’ என்னும் நிலைக்கு நீ மீண்டும் திரும்பி வா. நான் சபைக்கு என் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறேன், நீ என்ன செய்யப் போகிறாய் என்று காணும்படி நான் காத்துக் கொண்டிருக்கிறேன்’ என்று ஏதோவொன்று என்னிடம் பேசினது போல் தோன்றியது. 176. நாம் என்ன செய்யப் போகிறோம் என்று காணவே அவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்பது தான் எல்லா நேரமும் நம்மைக் குறித்த அவருடைய மனப்பான்மையாக இருக்கிறதோ என்று நான் வியந்தேன். நாம் சற்று முன்பு பிரசங்கித்துக் கொண்டிருந்த இந்த நேரத்தின் அடையாளங்களைக் குறித்து என்ன-? அவர் என்ன செய்கிறார்-? நாம் என்ன செய்வோம் என்று காணும்படி அவர் காத்துக் கொண்டிருக்கிறார். 177. நல்லது, நான் என் கரத்தில் அந்த சிறு குழந்தையை எடுத்தேன், இவ்விதமாக என் விரல்களில் அதை வைத்திருந்தேன், அது மிகவும் சிறியதாயிருந்தது. நான், ‘கர்த்தாவே, உம்முடைய ஊழியக்காரனின் ஜெபத்தைக் கேட்டருளும். நீர் இருக்கிறீர் என்று நான் விசுவாசிக்கிற விசுவாசத்தினாலே, நான் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை புற்று நோயாகிய இந்த பிசாசுக்கும் இந்த குழந்தையின் ஜீவனுக்குமிடையில் வைக்கிறேன்: சாகடிப்பவனுக்கும் குழந்தைக்கும் இடையில் இரத்தத்தை வைக்கிறேன். விசுவாசத்தினாலே அதை வைக்கிறேன்’ என்றேன். வேறு எதுவும் என்னால் பேச முடியவில்லை. நான் அப்படியே சுற்றும் முற்றும் திரும்பி வெளியே நடக்கத் துவங்கினேன். தகப்பனார் என்னைப் பின்தொடர்ந்து வந்தார். அவர், ‘சகோதரன் பிரன்ஹாமே, கொஞ்சம் தசமபாகத்தை உங்களுக்குக் கொடுக்கும்படி கர்த்தர் என்னுடைய இருதயத்தில் வைத்தார்’ என்றார். ‘ஓ,’ நான், ‘சகோதரனே, அதைக் குறித்து சிந்திக்காதீர். வேண்டாம். சகோதரனே, எனக்குப் பணம் அவசியமில்லை’ என்றேன். 178. அவர், ‘ஆனால் நான் கொஞ்சம் தசமபாகத்தை சேமித்து வைத்திருக்கிறேன்’ என்றார். (ஓ, கொஞ்சம் பணம், சரியாக எவ்வளவு என்று இப்பொழுது மறந்து விட்டது; ஏறக்குறைய 50 டாலர்கள் என்று நம்புகிறேன்). அவர், ‘அதை உங்களுக்குக் கொடுக்கும்படி கர்த்தர் அதை என்னுடைய இருதயத்தில் வைத்தார்’ என்றார். 179. நான், ‘என்னவென்று நான் உமக்குக் கூறுகிறேன். நான் அதைப் பெற்றுக் கொண்டு, அதைத் திரும்பவும் உமக்கே கொடுத்து விடுகிறேன், அதை அங்கேயிருக்கும் சிறு ரிக்கிக்குக் கொடுங்கள், அதனுடைய மருத்துவ செலவுக்குக் கொடுத்து விடுங்கள், ஏனென்றால் நீர் ஒரு பிரசங்கி. அது என்னவென்று எனக்குத் தெரியும், பணம் என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். மேலும் நீர் ஒரு மிஷனரி; பணம் தேவைப்படும் என்று எனக்குத் தெரியும், உமக்கு ஒரு குடும்பம் உண்டு, மேலும் மருத்துவருக்கு செலுத்துவதற்கு இந்த பணம் எல்லாம் தேவைப்படுகிறது என்பது எனக்குத் தெரியும். சிறு ரிக்கியின் மருத்து செலவுக்கு அதை வைத்துக் கொள்ளுங்கள்’ என்றேன். அவர், ‘சகோதரன் பிரன்ஹாமே, அதைச் செய்ய எனக்கு விருப்பமில்லை. இது மருத்துவர்களுக்கு செலுத்த வேண்டியதல்ல; இது ஊழியக்காரர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணம்’ என்றேன். 180. நான், ‘ஆமாம், ஆனால் நான் இதை திரும்ப உமக்கே கொடுக்கிறேன்’ என்றேன். நான் அதை மறுத்து விட்டேன். நான் வீட்டிற்குச் சென்றேன், காரியம் என்னவெனில், ஒரு சில மணி நேரங்களில், அந்த தாடைகளும், அதனுடைய நாவும் அதனுடைய இயல்பான நிலைக்குத் திரும்பி விட்டன. தேவன் அந்த சிறு குழந்தையை சுகமாக்கினார். நான் அங்கிருந்த புறப்பட்ட அக்காலையில் அவர்கள் அந்த விசிலை அதனுடைய தொண்டையை விட்டு அகற்றி விட்டார்கள். அது மேற்கு கடற்கரை முழுவதையும் விழித்தெழச் செய்தது. 181. பிரபலமான மருத்துவர் தமது மகனை தம்முடைய பேரப்பிள்ளையோடு அனுப்பினார், அவர்கள் சாலையில் நிறுத்தினார்கள், பசடேனாவில் (Pasadena), நாற்பது அல்லது ஐம்பது மைல்கள், மூளையில் நரம்புப் பிடிப்பு ஏற்பட்டிருந்த அந்தக் குழந்தைக்காக ஜெபிக்கும்படியாக நான் கடந்து சென்ற இடத்திலிருந்த அந்த சாலையில் அவர்கள் நின்றார்கள். அவர்கள் அதற்கு பெனிசிலின் மருந்து (penicillin shot) செலுத்தினார்கள், அதனுடைய இடுப்பில் பெனிசிலின் மருந்து செலுத்தினதின் விளைவாக அங்கு ஒரு புற்று நோய் ஏற்பட அது காரணமாகியது. கர்த்தர் அதை சுகமாக்கினார் என்று நான் நிச்சயம் உடையவனாயிருக்கிறேன். 182. அந்த வீட்டை விட்டுப் புறப்படுவதற்கு சற்று முன்பு, தொலைபேசி ஒலித்தது, தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருந்தது. சகோதரன் ஆர்கன்பிரைட் (அவர் வேறு ஒருவருடன் விவாதித்துக் கொண்டிருந்ததை நான் கேட்டேன்), ‘இல்லை, நான் அதைச் செய்ய மாட்டேன்’ என்றார். நான் காரினுள் ஏறின போது, அங்கே ஒரு - ஒரு சிறு ஸ்டேசன் வாகன் (station wagon) கார் வந்து நின்றது. அது யார், அது என்னுடைய சிறு மெக்ஸிகன் சகோதரனும் அவருடைய மனைவியும் தான். அவர்கள் இருவருமே அழுது கொண்டே தேவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். ‘சகோதரன் பிரன்ஹாமே, நான் இந்த தசமபாகத்தை உமக்குக் கொண்டு வந்தேன்’ என்றார். ‘ஓ,’ நான், ‘சகோதரனே, நான் அதைப் பெற்றுக் கொள்ள முடியாது. என்னால் அதைச் செய்ய முடியாது’ என்றேன். அவர், ‘ஆனால் நான் அதை உமக்குக் கொண்டு வந்தேன்’ என்றார்... நான், ‘அதை ரிக்கியின் பில்லுக்கு கட்டி விடுங்கள் என்று நான் உம்மிடம் கூறினேனே’ என்றேன். 183. அவர், ‘இந்தக் காலையில், ரிக்கியின் பில்லைக் கட்டும்படி போய், நான் இந்த தசம பாகத்தை மருத்துவரிடம் கொடுக்கும்படி போனபோது, மருத்துவரோ, ‘நீர் எனக்கு எதுவும் கடன்பட்டிருக்கவில்லை’ என்றார். அவர், ‘எனக்கு அதனோடு எந்த சம்பந்தமும் கிடையாது. அது ஒரு வழக்கத்திற்கு மாறான மகத்தான குறிப்பிடத்தக்க காரியம். நீர் எனக்கு ஒரு பென்னியும் (ஒரு காசும்) கடன்பட்டிருக்கவில்லை’ என்றார்’ என்று கூறினார். ஆகையால் அவர், ‘சகோதரன் பிரன்ஹாமே, இதை எடுத்துக் கொள்ளுங்கள். அதைப் பெற்றுக் கொள்ள வேண்டியவர் நீர் தான் என்று கர்த்தர் என்னிடம் கூறினார்’ என்றார். 184. ‘ஓ, என்னால் முடியாது’ என்று எண்ணினேன். நான், ‘கர்த்தாவே, நான் அதை வாங்க வேண்டும் என்பது போல் உணரவில்லை’ என்று கூறினேன். அப்போது ஏதோவொன்று என்னிடம் வந்தது. ஒரு நாள் இயேசு நின்று கொண்டு, ஐசுவரியவான்கள் தங்களிடமிருந்த அதிக திரளான பணத்தை (காணிக்கையாகப்) போடுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார். ஓ, அவர்களிடம் மிகுதியான பணம் இருந்தது, எனவே அவர்கள் அதிகமாக (காணிக்கை) கொடுக்க முடிந்தது. ஒரு சிறு விதவை மூன்று காசுகளைக் கொண்டு வந்தாள், அவளிடம் இருந்ததெல்லாம் அவ்வளவு தான். அவள் ஜீவனுத்திற்காக வைத்திருந்ததெல்லாம் அவ்வளவு தான். அவள் அதை காணிக்கை போட்டாள். இப்பொழுது, நாம் என்ன சொல்லியிருப்போம்-? ‘ஓ, சகோதரியே, அதைச் செய்யாதே, ஊ-ஊ, எங்களுக்கு அது தேவையில்லை என்று உனக்குத் தெரியும். அந்த காசுகளைக் காணிக்கை போடாதே. உன்னுடைய ஜீவனத்துக்காக இருப்பதெல்லாம் அவ்வளவு தான்’ என்று சொல்லியிருப்போம். ஆனால் இயேசுவோ அவள் முன் சென்று அந்த காசுகளைக் காணிக்கைப்போடும்படி அனுமதித்தார். பெற்றுக் கொள்வதைக் காட்டிலும் கொடுப்பதே அதிக ஆசீர்வாதமாயுள்ளது. 185. நான் அந்த கொஞ்சமான தசமபாகத்தைப் பெற்றுக் கொண்டேன். நான் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. என்னால் கூடுமானவரையில் சிறந்த முறையில், தேவனுடைய மகிமைக்காக எங்கேயோவுள்ள ஏதோவொரு வேலைக்காக அதைக் கொடுப்பேன். அது என்ன-? அது தான் தேவனுடைய மகிமை. அது தான் தேவனுடைய வல்லமை. 186. நிழல்கள் படர்ந்து கொண்டிருக்கின்றன. கிறிஸ்து தோன்றுகிறார். அதன் காரணமாகத் தான் அடையாளங்களும் அற்புதங்களும் தோன்றுகின்றன. அந்த மகத்தான செயற்கைக் கோளானது அவருடைய செட்டைகளின்கீழ் ஆரோக்கியத்தோடு அதிகாலை நட்சத்திரங் களைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. அவருடைய பிரசன்னத்தின் பிரதிபலிப்பிலிருந்து அவர் சுகமளித்தலைக் கொண்டு வருவாரானால், அவர் நபராக வரும்போது, அவர் என்ன செய்வார்-? 187. நம்முடைய இந்த அழிவுள்ள சரீரங்கள் மறுரூபமாகும், இது அவருடைய சொந்த மகிமையின் சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபமாகும். அவர் வரும் போது, அது என்னவாக இருக்கும்-? அவர் வரும் வரையில், அவருடைய பிரசன்னத்தின் சூரிய வெளிச்சத்திற்காக நாம் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். அதிகாலை நட்சத்திரங்கள் வருகின்ற போது, மகிமையின் மதிற்சுவர்களில் ஏறி, இந்த இருண்ட மணி வேளையில் அவருடைய வருகையை வரவேற்கும் படியாக அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். நாம் ஜெபிப்போம். 188. ஓ, கர்த்தாவே, எவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தாலும், அங்கே (நேரமே) இல்லாத அளவுக்கு உம்மை நாங்கள் மிகவும் அதிகமாக நேசிக்கிறோம் கர்த்தாவே... உம்முடைய புகழைக் குறித்து சாட்சி கூறிக் கொண்டிருப்பதற்கு நாங்கள் ஒருபோதும் களைப்படைந்து விடமாட்டோம். ஆனால் அந்த மணி வேளையானது இப்பொழுது இங்கே உள்ளது. வியாதியாயுள்ள ஜனங்கள் அங்கே காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த சாட்சிகளை நீர் அறிந்திருக்கிறீர். எனக்குத் தெரிந்த வரை அவர்கள் அங்கே இருக்கிறார்கள், கர்த்தாவே, அங்கே வெளியே நின்று கொண்டிருக்கிற விமான ஓட்டியைக் குறித்த இம்மியும் பிசகாத உண்மையானது அவரால் எவ்வாறு நிற்க முடிந்தது என்றும் அவருடைய சரீரமானது எப்படிப்பட்ட நிலைமையில் எல்லாம் இருந்தது என்றும் காட்டிக் கொண்டிருக்கிறது. அவருடைய காற்சட்டையை மேலே உயர்த்தி, முழுவதுமாக உடைந்து போயிருந்த அவருடைய முழங்கால்களிலும் கால்களிலும் மருத்துவர்கள் அந்த எலும்புகளை திரும்பவும் ஒன்றாகப் பொருத்துவதற்காக முயற்சி செய்ததினால் உண்டான தழும்புள்ள இடங்களை காண்பித்தார். 189. முகத்தில் வர்ணம் தீட்டப்பட்டவளாய் அங்கே நின்று கொண்டிருந்த அந்தப் பெண்மணியை நீர் கண்டீர், உம்முடைய வல்லமையின் மூலமாக சுகமாக்கப்பட்டிருந்த அவளுடைய மூட்டு கீல்வாத நிலையைக் குறித்து அவள் கூறின போது, அந்த சந்தோஷத்தின் கண்ணீரினால் அந்த முகவர்ணங்கள் கழுவப்பட்டன. அன்பிற்குரிய அந்த சிறு குழந்தையைக் குறித்தும், அந்த தகப்பனாரின் சாட்சியையும் அதைக் கொடுத்த அவர்களைக் குறித்தும் உள்ள (காரியங்களைப் பேசினோம்.)... 190. இப்பொழுதும், கர்த்தாவே, நீர் உலகத்தில் எந்தவிடத்திலும் மகத்தானவராக இருப்பதைப் போலவே இக்காலையில் இங்கே இக்கூடாரத்திலும் மகத்தானவராக இருக்கிறீர். நாங்கள் எங்கு கூடி வந்தாலும், நீர் எங்கள் மத்தியில் இருப்பீர் என்று வாக்குத்தத்தம் பண்ணி இருக்கிறீர். இப்பொழுதும், நீர் இக்காலையில் எங்களிடம் அனுப்பியிருக்கிற இந்த வியாதியஸ்தர்களை அழைத்து, நாங்கள் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும், விசுவாசமுள்ள ஜெபத்தை எங்கள் முழு இருதயத்தோடும் ஜெபிக்க வேண்டியுள்ளது. நீர் தாமே வியாதியஸ்தர்களை இரட்சித்து அவர்களை எழுப்புவீராக. அவர்கள் பாவம் செய்து இருப்பார்களானால், அவர்களை மன்னியும், பிதாவே. நாங்கள் ஒருவருக்கொருவர் எங்கள் தவறுகளை அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கிறோம். ‘நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது’ என்று நீர் கூறியிருக்கிறீர். 191. இந்த காலையில் எங்களோடு கூட வைக்கப்பட்டுள்ள ஒருத்தியை எங்களுக்குத் தெரியும், அவள் இந்த சிறு குழந்தைகளைக் கொண்டிருக்கிற வாலிப தாயார். கர்த்தாவே, மருத்துவர்களின் கூற்றுப்படி, அவள் தன்னுடைய பாதையின் முடிவுக்கு அருகாமையில் இருக்கிறாள். ஆனால் தேவனே, நீர் அவளுக்கும் அந்த சத்துருவுக்கும் இடையே நிற்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் அவளை அபிஷேகித்து அவளுக்காக ஜெபிக்கும் போது, உம்முடைய வல்லமை தாமே அவளுடைய ஆத்துமாவைத் தொட்டு, அது விசுவாசத்தைக் கொண்டு வந்து விடுதலை பண்ணுவதாக. அவள் வீட்டிற்குச் சென்று சுகமடைவாளாக. அவள் துதியை செலுத்தி, தேவனுடைய மகிமைக்காக அதிகாலை நட்சத்திரத்தின் ஒரு - ஒரு பிரதிபலிப்பாக இருப்பாளாக. ஆமென். 192. இப்பொழுது, சகோதரன் மெர்சியர் அவர்களே, நாம் முன்னேற்பாடாக இந்த ஜனங்களை அழைக்கும் போது. வந்து கொண்டிருக்கும் ஜனங்கள் - ஜெபிக்கப்படுவதற்காக இருப்பவர்களின் பட்டியலில் உள்ள இந்த எண்களை அழைப்போம்... *******